சென்னை பாடியில் ஐ.ஏ.எஸ். பெண் அதிகாரி வீட்டில் 25 பவுன் நகை கொள்ளை


சென்னை பாடியில் ஐ.ஏ.எஸ். பெண் அதிகாரி வீட்டில் 25 பவுன் நகை கொள்ளை
x
தினத்தந்தி 13 May 2019 4:15 AM IST (Updated: 12 May 2019 10:51 PM IST)
t-max-icont-min-icon

சென்னை பாடியில் ஐ.ஏ.எஸ். பெண் அதிகாரி வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

பூந்தமல்லி,

சென்னை கொரட்டூர் கோல்டன் காலனியில் வசித்து வருபவர் லீணாநாயர் (வயது 62). ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர், ரியல் எஸ்டேட் சார்ந்த தீர்ப்பாயத்தில் உறுப்பினராக தற்போது பணிபுரிந்து வருகிறார்.

தனியாக வசித்து வரும் இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டின் கதவை பூட்டி விட்டு முதல் தளத்தில் உள்ள அறையில் தூங்கச் சென்றார்.

காலையில் எழுந்து வந்து பார்த்தபோது தரைதளத்தின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. இதனை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அறைக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக் கப்பட்டு அதில் இருந்த 25 பவுன் தங்கநகைகள் வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.58 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து கைவரிசை காட்டியுள்ளனர்.

இதுகுறித்து கொரட்டூர் போலீசில் புகார் அளித்ததையடுத்து கொரட்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டில் சோதனை செய்தனர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் கைரேகை நிபுணர் கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகை கள் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி வீட்டில் கொள்ளை நடந்தது அப்பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story