சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உலக செவிலியர்கள் தின உறுதிமொழி ஏற்பு
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உலக செவிலியர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. அதையொட்டி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
சேலம்,
உலகப்போரில் காயம் அடைந்தவர்களுக்கு எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி பிளாரன்ஸ் நைட்டிங்கேல் என்ற பெண் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் சிகிச்சை அளித்தார். மருத்துவ சேவையில் உலக புகழ் பெற்ற பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்தநாள், உலக செவிலியர் தினமாக ஒவ்வொரு ஆண்டும் மே 12-ந் தேதி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி, சேலம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நேற்று காலை செவிலியர் தினவிழா நடந்தது. விழாவையொட்டி ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள பிளாரன்ஸ் நைட்டிங்கேல் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் ‘கேக்‘ வெட்டி கொண்டாடப்பட்டது.
விழாவில் பங்கேற்ற செவிலியர்கள் மெழுகுவர்த்திகளை கைகளில் ஏந்தி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். ஏழை, எளியவர்கள், ஆதரவற்றவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் சிறந்த மருத்துவ சேவையை அளிப்பது, மனிதநேயத்துடன் நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சைகளை அளிப்பது என உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னர் சிறப்பாக சேவை செய்த கண்காணிப்பாளர்கள், செவிலியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து அங்கு திரண்டிருந்தவர்களுக்கு கேக் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. விழாவில் அரசு செவிலியர் சங்க மாவட்ட தலைவர் பெருமாள், துணைத்தலைவர் சுதா, செயலாளர் வளர்மதி, பொருளாளர் விஜயலட்சுமி உள்பட செவிலியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story