நுகர்பொருள் வாணிபக்கழக தொழிலாளர் சங்க கூட்டம்


நுகர்பொருள் வாணிபக்கழக தொழிலாளர் சங்க கூட்டம்
x
தினத்தந்தி 13 May 2019 4:15 AM IST (Updated: 13 May 2019 2:50 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக தொழிலாளர் சங்க ஏ.ஐ.டி.யூ.சி.யின் ஆண்டு பேரவை கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது.

தஞ்சாவூர்,

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக தொழிலாளர் சங்க ஏ.ஐ.டி.யூ.சி.யின் ஆண்டு பேரவை கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. இதற்கு மாநில தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் சந்திரகுமார், மாநில பொருளாளர் கோவிந்தராசன் ஆகியோர் அறிக்கை வாசித்தனர். மாவட்ட செயலாளர் அன்பழகன் வரவேற்றார்.

இதில் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் தில்லைவனம், சுமைதூக்கும் தொழிலாளர் சங்க மாநில தலைவர் சாமிக்கண்ணு, அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்க சம்மேளன துணை பொதுச் செயலாளர் துரை.மதிவாணன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பக்கிரிசாமி, அரசு பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர் ஆகியோர் பேசினர்.

கூட்டத்தில், உணவு பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் தமிழகத்தின் பொதுவினியோக திட்டத்தை சீரழிக்க மத்தியஅரசு எடுக்கும் நடவடிக்கைக்கு மாநிலஅரசு துணை போவது கண்டிக்கத்தக்கது. ஏழை, எளிய மக்களுக்கு பேரூதவியாக இருக்கிற பொதுவினியோக திட்டத்தை தொய்வின்றி தமிழகத்தில் தொடர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வரும் நெல் கொள்முதல் பருவத்தில் ஊழல் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க தமிழகஅரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கொள்முதல் பணியாளர்களுக்கு பணியின் தன்மை, பொறுப்பு இவற்றை கணக்கில் கொண்டு காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்து அமல்படுத்த வேண்டும்.

முடிவில் மாவட்ட பொருளாளர் தியாகராஜன் நன்றி கூறினார்.

Next Story