பெங்களூருவில் குடிநீர் கட்டணத்தை உயர்த்த முடிவு இம்மாத இறுதியில் மாநில அரசிடம் வரைவு அறிக்கை தாக்கல்
பெங்களூருவில், குடிநீர் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக பெங்களூரு குடிநீர் வினியோகம் மற்றும் வடிகால் வாரியம் சார்பில் இம்மாத இறுதியில் மாநில அரசிடம் வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
பெங்களூரு,
பெங்களூருவில், குடிநீர் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக பெங்களூரு குடிநீர் வினியோகம் மற்றும் வடிகால் வாரியம் சார்பில் இம்மாத இறுதியில் மாநில அரசிடம் வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
குடிநீர் கட்டணம்
பெங்களூரு குடிநீர் வினியோகம் மற்றும் வடிகால் வாரியம் சார்பில் குடிநீ்ர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பெங்களூரு குடிநீர் வினியோகம் மற்றும் வடிகால் வாரியம் சார்பில் குடிநீர் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, அந்த வாரியம் ஆலோசனை கூட்டம் நடத்தி உள்ளது. கூட்டத்தின் அம்சங்களை வரைவு அறிக்கையாக மாநில அரசிடம் இம்மாத(மே) இறுதியில் சமர்ப்பிக்க உள்ளது. அதன்படி, குடிநீர் கட்டணத்தை 15 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்று கூறப்பட உள்ளது. இதற்கு மாநில அரசு அனுமதி அளிக்கும் பட்சத்தில் விரைவில் குடிநீர் கட்டண உயர்வு அமலுக்கு வரும்.
அதிக நிதிச்சுமையை சமாளிக்க...
இதுகுறித்து பெங்களூரு குடிநீர் வினியோகம் மற்றும் வடிகால் வாரிய தலைவர் துஷார் கிரிநாத் கூறுகையில், ‘மின்கட்டண உயர்வு, உள்கட்டமைப்பு பணிகள் மற்றும் நடைமுறை செலவு ஆகியவற்றின் காரணமாக பெங்களூரு குடிநீர் வினியோகம் மற்றும் வடிகால் வாரியத்துக்கு அதிக நிதிச்சுமை ஏற்படுகிறது. இதை சமாளிக்க குடிநீர் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு முன்பு கடந்த 2014-ம் ஆண்டு குடிநீர் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டது. இருப்பினும் மின்கட்டணம் உயர்த்துவது போன்று ஆண்டுக்கு ஒருமுறை குடிநீர் கட்டணம் உயர்த்தப்படுவது இல்லை. இதனால் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது குடிநீர் கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று மாநில அரசிடம் அனுமதி கேட்க உள்ளோம்’ என்றார்.
Related Tags :
Next Story