40 தொகுதிகளுக்கு மேல் காங்கிரஸ் வென்றால் பிரதமர் மோடி தூக்கில் தொங்குவாரா? மல்லிகார்ஜூன கார்கே கேள்வி
40 தொகுதிகளுக்கு மேல் காங்கிரஸ் வென்றால் பிரதமர் மோடி தூக்கில் தொங்குவாரா? என்று மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பி உள்ளார்.
பெங்களூரு,
40 தொகுதிகளுக்கு மேல் காங்கிரஸ் வென்றால் பிரதமர் மோடி தூக்கில் தொங்குவாரா? என்று மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பி உள்ளார்.
தூக்கில் தொங்குவாரா?
காங்கிரஸ் கட்சி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 44 இடங்களை பெற்றிருந்த நிலையில், இந்த தேர்தலில் அந்த கட்சி 40 தொகுதிகள் கூட வெல்ல முடியாது என பிரதமர் மோடி கூறி வருகிறார். இதற்கு மக்களவை காங்கிரஸ் தலைவரான மல்லிகார்ஜூன கார்கே நேற்று பதிலடி கொடுத்துள்ளார்.
கர்நாடகத்தில் சிஞ்சோலி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகிறவர்கள் இங்கிருக்கும் மக்களாகிய நீங்கள்தான். இந்த தொகுதியின் வேட்பாளரான சுபாஷ் மற்றும் எங்களைப் போன்றவர்களின் எதிர்காலம் உங்கள் கையில்தான் இருக்கிறது. அது மோடியிடமோ அல்லது பா.ஜனதாவிடமோ இல்லை.
ஆனால் மோடி செல்லும் இடங்களில் எல்லாம், காங்கிரஸ் கட்சி 40 இடங்களை கூட பெறாது எனக்கூறி வருகிறார். இதை நீங்கள் யாராவது ஏற்றுக்கொள்கிறீர்களா? அப்படி நாங்கள் 40 இடங்களுக்கு மேல் பெற்றுவிட்டால், டெல்லி விஜய் சவுக் பகுதியில் மோடி தூக்கில் தொங்குவாரா?’ என கேள்வி எழுப்பினார்.
கண்டனம்
காங்கிரஸ் தலைவரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அவருக்கு பா.ஜனதா கண்டனம் தெரிவித்து உள்ளது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பா.ஜனதா எம்.பி.யான ஷோபா கூறியுள்ளார். சிஞ்சோலியில் நடந்த பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து மல்லிகார்ஜூன கார்கேவுடன் சேர்ந்து கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் பிரசாரம் செய்தார்.
Related Tags :
Next Story