வங்கியின் துணை நிதி நிறுவனத்தில் வேலை
வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
பிரபல வங்கியின் துணை நிதி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இதுபற்றிய விவரம் வருமாறு:-
பொதுத்துறை வங்கிகளில் ஒன்று கனரா வங்கி. கேன் பின் ஹோம்ஸ் என்பது இந்த வங்கி யின் துணை நிதி நிறுவனமாகும். வீட்டுக்கடன் வசதி உள்ளிட்ட சேவைகளை வழங்கும் இந்த நிறுவனத்தில் தற்போது மேலாளர், ஜூனியர் ஆபீசர் உள்ளிட்ட அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை பார்ப்போம்...
ஒரு அறிவிப்பின்படி ஒப்பந்த அடைப்படை யில் சீனியர் மேனேஜர் பணிக்கு 10 பேரும், ஜூனியர் ஆபீசர் பணிக்கு 100 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் முதுநிலை மேலாளர் பணிக்கு 62 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜூனியர் ஆபீசர் பணிக்கு 21 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். 1-6-2019-ந் தேதியை அடிப் படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படும்.
பட்டப்படிப்புடன் கணினி அறிவு பெற்றவர்கள் ஜூனியர் ஆபீசர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவு வங்கிப் பணிகளில் போதிய அனுபவம் உள்ளவர்கள் முதுநிலை மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த பணிகளுக்கு ரூ.100 கட்டணமாக செலுத்தி இணையதள விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 18.5-2019-ந் தேதியாகும்.
மற்றொரு அறிவிப்பின்படி மேலாளர் பணிக்கு 30 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணிக்கு 1-6-2019-ந் தேதியில் 25 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். ரூ.100 கட்டணம் செலுத்தி, மே 18-ந் தேதிக்குள் வி்ண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.
இவை பற்றிய விவரங்களை www.canfinhomes.com/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Related Tags :
Next Story