பென்னாகரம் அருகே போலீஸ்காரர் மனைவியிடம் 6 பவுன் நகை பறிப்பு 2 மர்மநபர்கள் துணிகரம்


பென்னாகரம் அருகே போலீஸ்காரர் மனைவியிடம் 6 பவுன் நகை பறிப்பு 2 மர்மநபர்கள் துணிகரம்
x
தினத்தந்தி 14 May 2019 4:30 AM IST (Updated: 13 May 2019 11:05 PM IST)
t-max-icont-min-icon

பென்னாகரம் அருகே போலீஸ்காரர் மனைவியிடம் 6 பவுன் நகை பறித்து சென்ற 2 மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

பென்னாகரம், 

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள அரிச்சந்திரனூரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலீஸ்காரராக வேலைபார்த்து வருகிறார். இவருடைய மனைவி ரத்தினம்மாள் (வயது 40).

நேற்று முன்தினம் இரவு ஆறுமுகம் வீட்டில் இல்லை. ரத்தினம்மாள், மகள் ஆகியோர் வீட்டில் இருந்தனர்.

நள்ளிரவு 2 மணியளவில் வீட்டு கதவை தட்டும் சத்தம் கேட்டது. ரத்தினம்மாள் எழுந்து வீட்டின் கதவை திறந்து வெளியே வந்தார். அப்போது மர்ம நபர்கள் 2 பேர் திடீரென பாய்ந்து ரத்தினம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு ஓடி விட்டனர். இதைபார்த்ததும் ரத்தினம்மாள் சத்தம் போட்டார். உடனே பக்கத்து வீட்டினர் ஓடி வந்தனர். அதற்குள் மர்ம நபர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இதுபற்றி பென்னாகரம் போலீசில் ரத்தினம்மாள் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து துணிகர செயலில் ஈடுபட்ட 2 மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story