தர்மபுரி மாவட்டத்தில் மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 25 பேர் கைது
தர்மபுரி மாவட்டத்தில் மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 25 பேர் கைது செய்யப்பட்டனர்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மதுபாட்டில்களை வீடுகள் மற்றும் கடைகளில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு பலர் விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் உத்தரவின்பேரில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்தது தொடர்பாக தர்மபுரியில் 11 பேரும், பென்னாகரத்தில் 5 பேரும், அரூரில் 4 பேரும், பாலக்கோட்டில் 5 பேரும் சிக்கினார்கள். இவர்களிடம் இருந்து 200-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் 25 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story