தங்க பதக்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு


தங்க பதக்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு
x
தினத்தந்தி 14 May 2019 3:45 AM IST (Updated: 14 May 2019 1:05 AM IST)
t-max-icont-min-icon

மலேசியாவில் சமீபத்தில் நடந்த பல நாடுகளின் வீரர்கள்- வீராங்கனைகள் பங்கேற்ற கராத்தே போட்டியில் இந்தியா சார்பில் இலக்கியா உள்பட 12 பேர் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா பிலிமிசை கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம்-கீதா தம்பதியினரின் மகள் இலக்கியா(வயது 12). இவர் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு பயின்றுவருகிறார். மலேசியாவில் சமீபத்தில் நடந்த பல நாடுகளின் வீரர்கள்- வீராங்கனைகள் பங்கேற்ற கராத்தே போட்டியில் இந்தியா சார்பில் இலக்கியா உள்பட 12 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் இலக்கியா உஸ்பெஸ்கிஸ்தான் வீராங்கனையுடன் மோதி 2 பிரிவுகளில் தங்க பதக்கம் வென்று பெரம்பலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். தங்க பதக்கம் வென்ற இலக்கியாவிற்கும், அவரது பெற்றோருக்கும் பெரம்பலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகதேவன் தலைமையில், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் சால்வை அணிவித்து ரூ.5 ஆயிரம் வழங்கி பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தனர். இதில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story