கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் செவிலியர் தின விழா சிறப்பாக பணியாற்றிய 4 பேர் கவுரவிப்பு
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நேற்று செவிலியர் தின விழா கொண்டாடப்பட்டது.
சென்னை,
செவிலியர் தின விழாவுக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் வசந்தாமணி தலைமை தாங்கி ‘கேக்’ வெட்டி செவிலியர் அனைவருக்கும் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து செவிலியர்கள் அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பின்னர் மருத்துவ மனையில் 20 வருடங்கள் பணியாற்றிய 12 செவிலியர்களுக்கு சிறப்பு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் கடந்த ஆண்டு சிறப்பாக பணியாற்றிய 4 செவிலியர் களும் கவுரவிக்கப்பட்டனர்.
நிகழ்ச்சியில் ‘டீன்’ டாக்டர் வசந்தாமணி பேசும்போது, செவிலியர் பணி மகத்தான பணியாகும். கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் செவிலியர்களுடன் இணைந்து மருத்துவ மனையில் பணியாற்றுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இங்கு 150 செவிலியர்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். நோயாளிகளின் உடல் நிலையை பாதுகாக்கும் செவிலியர்கள் தங்கள் உடல் நிலையையும் பாதுகாக்க வேண்டும் என்று கூறினார்.
Related Tags :
Next Story