அரசியல் வேறுபாட்டை கடந்து வறட்சி பாதித்த மக்களுக்கு உதவி கிடைக்க நடவடிக்கை சரத்பவார் கூறுகிறார்
அரசியல் வேறுபாட்டை கடந்து வறட்சி பாதித்த பகுதிகளில் மக்களுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறினார்.
மும்பை,
மராட்டியத்தில் உள்ள மரத்வாடா மண்டலத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது. மக்கள் பல்வேறு பகுதிகளில் குடிநீருக்காக தவித்து வருகின்றனர். கால்நடைகளும் நீர் இன்றி தவித்து வருகின்றன.
இந்தநிலையில் மாநில அரசு வறட்சி நிவாரண பணிகளை முடுக்கி விட்டுள்ளது. சமீபத்தில் கூட முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், வறட்சி பாதித்த மாவட்டங்களை சேர்ந்த கலெக்டர்கள் மற்றும் கிராம பஞ்சாயத்து தலைவர்களுடன் செல்போனில் ஆடியோ பிரிட்ஜ் தொழில்நுட்பம் மூலம் உரையாடினார்.
இந்தநிலையில் வறட்சி பாதித்த மரத்வாடா பகுதிகளில் நேரடியாக சென்று மக்களை சந்தித்து அவர்களின் குறைகளைகேட்டறிந்து உதவுவதே சரியாக இருக்கும், வெறும் தொலைபேசி அழைப்பு மூலம் மக்களின் பிரச்சினையை புரிந்துகொள்ள முடியாது என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறினார்.
இந்தநிலையில் நேற்று அவர் வறட்சியால் பாதிக்கப்பட்ட மரத்வாடா மண்டலத்தில் உள்ள பீட் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து பிரச்சினைகளை கேட்டறிந்தார்.
பின்னர் அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
மராட்டியத்தில் கடந்த 1972-ம் ஆண்டு நிலவியதை விட மோசமான வறட்சி தற்போது தலைவிரித்தாடுகிறது. நேற்று முதல்-மந்திரியை தொடர்புகொண்டு 4 அல்லது 5 நாட்களுக்குள் நேரம் ஒதுக்குமாறு கோரியுள்ளேன். அவர் எப்போது நேரம் ஒதுக்கினாலும் இங்கு நிலவும் பிரச்சினை குறித்து மற்ற எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து நாங்கள் எடுத்துரைப்போம்.
இதேபோல் சுற்றுபயணத்தை முடித்துவிட்டு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை சந்தித்து ஆலோசனை நடத்துவேன். அரசியல் ரீதியான வேறுபாடுகளை கடந்து வறட்சியின் பிடியில் சிக்கியுள்ள மக்களுக்கு உதவுவதில் தேசியவாத காங்கிரஸ் முனைப்புடன் உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story