மாவட்ட செய்திகள்

உளுந்தூர்பேட்டை அருகே, தண்டவாளத்தில் ரத்த காயங்களுடன் ஆண் பிணம் கொலையா? போலீஸ் விசாரணை + "||" + On the railway track With blood injuries Male corpse murder?

உளுந்தூர்பேட்டை அருகே, தண்டவாளத்தில் ரத்த காயங்களுடன் ஆண் பிணம் கொலையா? போலீஸ் விசாரணை

உளுந்தூர்பேட்டை அருகே, தண்டவாளத்தில் ரத்த காயங்களுடன் ஆண் பிணம் கொலையா? போலீஸ் விசாரணை
உளுந்தூர்பேட்டை அருகே ரெயில்வே தண்டவாளத்தில் ரத்த காயங்களுடன் ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசூர்,

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பரிக்கல் ரெயில்வே தண்டவாளத்தில் நேற்று காலை 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மர்மமான முறையில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தவரின் உடலை பார்வையிட்டு, அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை.

இதையடுத்து போலீசார், இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்த நபர் அந்த வழியாக சென்ற ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது யாரேனும் அவரை கொலை செய்து தண்டவாளத்தில் வீசிச் சென்றார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மானாமதுரை அருகே, தண்டவாளத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி ரெயிலை மறித்த வாலிபர் - சமூகவலைத்தளங்களில் பரவும் காட்சிகள்
மானாமதுரை அருகே தண்டவாளத்தின் குறுக்கே நிறுத்திய மோட்டார் சைக்கிளில் அமர்ந்து ரெயிலை நிறுத்திய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமான காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இது பற்றிய விவரம் வருமாறு:-

அதிகம் வாசிக்கப்பட்டவை