மாவட்ட செய்திகள்

நாமக்கல்லில் பரபரப்பு: ஓட்டல் தொழிலாளியை கழுத்தை அறுத்து கொல்ல முயற்சி + "||" + Fuck in Namakkal: Try to kill the hotel worker

நாமக்கல்லில் பரபரப்பு: ஓட்டல் தொழிலாளியை கழுத்தை அறுத்து கொல்ல முயற்சி

நாமக்கல்லில் பரபரப்பு: ஓட்டல் தொழிலாளியை கழுத்தை அறுத்து கொல்ல முயற்சி
நாமக்கல்லில் ஓட்டல் தொழிலாளியை சக தொழிலாளி கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல்,

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள வீரமாச்சான்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 45). இவர் நாமக்கல்-சேலம் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் சப்ளையராக பணிபுரிந்து வருகிறார். அதே ஓட்டலில் பரோட்டா மாஸ்டராக நாமக்கல்லை சேர்ந்த ஞானசேகரன் பணியாற்றி வருகிறார்.


நேற்று இரவு ஞானசேகரன் உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது அவர் வெங்காயம் வெட்டி தருமாறு கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டு உள்ளார். அதற்கு கிருஷ்ணமூர்த்தி வாழை இலையை வெட்டி விட்டு வெங்காயம் வெட்டி தருவதாக கூறியதாக தெரிகிறது. இதில் அவர்கள் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது.

இந்த தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த ஞானசேகரன் அருகில் இருந்த கத்தியை எடுத்து கிருஷ்ணமூர்த்தியின் கழுத்தை அறுத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. உயிருக்கு போராடிய கிருஷ்ணமூர்த்தியை சக தொழிலாளர்கள் மீட்டு, நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓட்டல் தொழிலாளியை சக தொழிலாளி கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. வீட்டை மீட்டு தரக்கோரி குடும்பத்துடன் பெண் தீக்குளிக்க முயற்சி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
வீட்டை மீட்டு தரக்கோரி குடும்பத்துடன் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
2. போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன் கடைக்காரர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
நாகர்கோவிலில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன் கடைக்காரர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
3. கடந்த 10 ஆண்டுகளில் மாயமானவர்களை கண்டுபிடிக்க போலீசார் புது முயற்சி டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்தது
திருச்சி சரகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் மாயமானவர்களை கண்டுபிடிக்க போலீசார் புதிய முயற்சியை கையாண்டனர்.
4. பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பெண் உள்பட 2 பேர் தீக்குளிக்க முயற்சி
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பெண் உள்பட 2 பேர் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
5. கந்துவட்டி கொடுமையால் வாலிபர் தீக்குளிக்க முயற்சி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
கந்துவட்டி கொடுமையால் வாலிபர் ஒருவர் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிகம் வாசிக்கப்பட்டவை