மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, ரெயில் மோதியதில் 8 ஆடுகளுடன் உரிமையாளரும் பலி - கொடைரோடு அருகே பரிதாபம் + "||" + When trying to cross the rails, The owner of the train with the 8 sheep was hit by the train

தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, ரெயில் மோதியதில் 8 ஆடுகளுடன் உரிமையாளரும் பலி - கொடைரோடு அருகே பரிதாபம்

தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, ரெயில் மோதியதில் 8 ஆடுகளுடன் உரிமையாளரும் பலி - கொடைரோடு அருகே பரிதாபம்
கொடைரோடு அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, ரெயில் மோதியதில் 8 ஆடுகள் பலியாகின. இந்த விபத்தில் ஆடுகளின் உரிமையாளரும் பரிதாபமாக இறந்தார்.
கொடைரோடு,

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை சத்தியா நகரை சேர்ந்தவர் பெருமாள் (வயது 55). இவர் ஆடுகளை வளர்க்கும் தொழில் செய்து வந்தார். இவருடைய பேரனுக்கு திருமணம் நடை பெற இருப்பதாக கூறப்படு கிறது. இதையொட்டி பெரு மாள் தான் வளர்க்கும் 100 ஆடுகளை வடமதுரையில் இருந்து கொடைரோடு அருகே மெட்டூரில் உள்ள தனது மகள் பொன்வேல் வீட்டில் விட முடிவு செய் தார்.

இந்நிலையில் நேற்று, வடமதுரையில் இருந்து திண்டுக்கல்-மதுரை 4 வழிச் சாலை வழியாக மெட்டூருக்கு 100 ஆடுகளையும் மேய்த்தபடி பெருமாளும், அவரிடம் வேலை பார்க்கும் அழகர் (55) என்பவரும் வந்து கொண்டி ருந்தனர். நேற்று மாலை 5.15 மணியளவில் கொடைரோடு அருகே மெட்டூர் ரெயில்வே தண்டவாளத்தை 100 ஆடுகளுடன் அவர்கள் கடக்க முயன்றனர். அப்போது கோவையில் இருந்து நாகர் கோவிலுக்கு செல்லும் பாசஞ்சர் ரெயில் வேகமாக வந்து கொண்டிருந்தது.

ரெயில் வருவதை பார்த்த பெருமாளும், அழகரும் ஆடுகளை தண்டவாளத்தில் இருந்து விரட்டுவதில் மும்முரமாக இருந்தனர். அந்த ஆடுகள் அங்குமிங்கும் மிரண்டு ஓடின. ஆனால் அதற்குள் ரெயில் அந்த பகுதிக்கு வேகமாக வந்தது. இதில் ரெயில் மோதியதில் பெருமாளும், அழகரும் தூக்கி வீசப்பட்டனர். தண்டவாளத் தில் நின்ற ஆடுகள் மீதும் ரெயில் மோதியது. அதில் 8 ஆடுகள் உடல் சிதறி பலியாகின. படுகாயம் அடைந்த பெருமாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கொடைரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். படுகாயங்களுடன் கிடந்த அழகரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெருமாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக் கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கண் இமைக்கும் நேரத்தில் ரெயில் மோதி பெருமாளும், ஆடுகளும் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.