காப்பர் காயில் அல்லது அலுமினியம் காயில் ஏ.சி.க்களில் சிறந்தது எது?


காப்பர் காயில் அல்லது அலுமினியம் காயில் ஏ.சி.க்களில் சிறந்தது எது?
x
தினத்தந்தி 15 May 2019 1:30 PM IST (Updated: 15 May 2019 1:30 PM IST)
t-max-icont-min-icon

காப்பர் (தாமிர) காயில்: இது வெப்பத்தைத் தாங்கக் கூடியது.

சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் தாமிர காயில்களை நீண்ட காலம் செயல்படவைக்க முடியும். பராமரிப்பது எளிது. காயில் செய்ய அதிக அளவில் தாமிரம் தேவைப்படும். இது விலை அதிகமானது. நெகிழ்வு தன்மை கொண்டது, உறுதியானது. பழுது பார்ப்பதும் எளிது.

அலுமினிய காயில்: விலை குறைவானது. குழாயில் அடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். அப்படி அடைப்பு ஏற்பட்டால் அதை சரி செய்வதும் கடினம். தாமிரத்துடன் ஒப்பிடுகையில் காயில் செய்ய குறைந்த அளவு அலுமினியம் போதுமானது. அலுமினியத்தின் விலையும் குறைவு. தாமிரத்தைப் போல உறுதியாக இருப்பதில்லை. இதைக்காக்க அதிக அளவிலான இன்சுலேசன் தேவைப்படும்.

இதை சுத்தம் செய்வதும் கடினம். நுண்ணிய தூசுகளை வெளியேற்றுவது கடினம். ரிப்பேர் செய்வது கடினம் ஆதலால் இதை முழுமையாகத்தான் மாற்ற வேண்டியிருக்கும். அலுமினியம் காயில் அல்லது காப்பர் காயில் ஏ.சி.க்களில் காப்பர் காயில் ஏ.சி.க்களே சிறந்தவை என்பதை சொல்லவும் வேண்டுமோ.


Next Story