ஜாக் உட்ஸ்டாக் புளூடூத் ஸ்பீக்கர்
ஸ்பீக்கர்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஸாக் நிறுவனம்
12 வாட் ஸ்பீக்கர்களை பில்ட் இன் மைக் வசதியோடு ஸ்பீக்கர்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஸாக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதனுடன் சப்ஊபரும் உள்ளது . இதன் விலை ரூ.4,999 ஆகும். துபாயைத் தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் ஸாக் நிறுவனம் தற்போது ஸ்பீக்கர் தயாரிப்பில் இறங்கியுள்ளது.
இந்த ஸ்பீக்கர்களை அமேசான், பிளிப்கார்ட், பே.டி.எம். இணையதளங்களில் வாங்க முடியும். மென்மையான தோல் மற்றும் அழகிய மர வேலைப்பாடுடன் இந்த ஸ்பீக்கர்கள் வந்துள்ளன. இது பிரீமியம் தோற்றத்தை அளிக்கிறது.
அந்தக் கால வால்வு ரேடியோ போன்ற தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்பீக்கர்கள் நவீன காலத்தில் மிகச் சிறந்த வரவேற்பைப் பெறும் என்பது இந்நிறுவனத்தின் எதிர்பார்ப்பாகும்.
இந்த ஸ்பீக்கரில் 2200 எம்.ஏ.ஹெச். பேட்டரி இருப்பதால் இது மின் இணைப்பின்றி செயல்படும். ஒரு முறை சார்ஜ் செய்தாலே 8 நாள்கள் தொடர்ந்து செயல்படும். இந்த ஸ்பீக்கரை 4 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும்.
Related Tags :
Next Story