மாவட்ட செய்திகள்

திருவாரூரில் பள்ளி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு + "||" + The officers of school vehicles examined in Tiruvarur

திருவாரூரில் பள்ளி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு

திருவாரூரில் பள்ளி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு
திருவாரூரில் பள்ளி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அரசு விதிமுறைகளை பின்பற்றி பள்ளி வாகனங்கள் இயக்கப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள கலெக்டர் ஆனந்த் உத்தரவிட்டார். அதன்படி நேற்று திருவாரூரில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.


இதில் உதவி கலெக்டர் முருகதாஸ், வட்டார போக்குவரத்து அதிகாரி செந்தில்குமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜான்ஜோசப் ஆகியோர் பள்ளி வாகனங்களில் தேவையான பாதுகாப்பு வசதி உள்ளதா? மாணவர்களை ஏற்றி செல்லும் நிலையில் வாகனம் உள்ளதா? என்பது பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.

இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரி செந்தில்குமார் கூறியதாவது:-

திருவாரூர், நன்னிலம், குடவாசல் ஆகிய பகுதிகளை சேர்ந்த 92 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது வாகனங்களில் அவசர கால வெளியேறும் வசதி, குழந்தைகள் எளிதாக வாகனத்தில் ஏற தாழ்வான படிக்கட்டுகள், பள்ளி வாகனம் என்ற அறிவிப்பு, வேக கட்டுப்பாட்டு கருவி, முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவி போன்ற வசதிகள் உள்ளதா? என ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வில் விதிமுறைகளை முறையாக கடைப் பிடிக்காத 4 பள்ளி வாகனங் களின் தகுதி சான்று ரத்து செய்யப்பட்டு உள்ளது. பள்ளி குழந்தைகளை அழைத்து செல்லும்போது டிரைவர்கள் முழு கவனத்துடன் வாகனங்களை இயக்க வேண்டும்.

செல்போன் பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அரசு விதிமுறைகளை மீறி இயக்கப்படும் பள்ளி வாகனங்கள் பறிமுதல் செய்யப் படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது போக்குவரத்து துணை ஆணையர் உதயகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டு நடராஜன், மோட்டார் வாகன ஆய்வாளர் கருப்பண்ணன் மற்றும் போக்குவரத்து அலுவலர்கள், பள்ளி வாகனங்களின் டிரைவர்கள் உடன் இருந்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. கோவையில், 1,172 தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு
கோவையில் 1,172 தனியார் பள்ளி வாகனங்கள் நேற்று ஆய்வு செய்யப்பட்டன.
2. அரவக்குறிச்சி தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் இடப்பற்றாக்குறை தேர்தல் அதிகாரியிடம் செந்தில்பாலாஜி புகார்
அரவக்குறிச்சி தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் இடப்பற்றாக்குறை உள்ளது என்று தேர்தல் அதிகாரியிடம், தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜி புகார் மனு கொடுத்தார்.
3. திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் அறைகள், 96 ‘வெப்’ கேமராக்கள் மூலம் கண்காணிப்பு
திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் அறைகள் 96 ‘வெப்’ கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும் என்று கலெக்டர் சிவராசு தெரிவித்தார்.
4. மயிலாடுதுறையில் வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடுகள் தீவிரம் கலெக்டர் தகவல்
மயிலாடுதுறையில், வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்தார்.
5. நாகையில் 10 பள்ளி வாகனங்களின் தகுதிச்சான்று ரத்து கலெக்டர் சுரேஷ்குமார் நடவடிக்கை
நாகையில் 10 பள்ளி வாகனங்களின் தகுதிச் சான்றை கலெக்டர் சுரேஷ்குமார் ரத்து செய்தார்.