மத்தியில் ஆட்சி அமைத்தாலும் பா.ஜனதாவால் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாது சரத்பவார் சொல்கிறார்
மத்தியில் ஆட்சி அமைத்தாலும் பா.ஜனதாவால் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாது என சரத்பவார் கூறினார்.
மும்பை,
நாடாளுமன்ற தேர்தல் முடிவு வருகிற 23-ந் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சரத்பவார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடக்கும் ஒருநாள் அல்லது 2 நாட்களுக்கு முன்பு டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஒன்றுகூடி மத்தியில் நிலையான ஆட்சியை அமைப்பது குறித்து விவாதிப்போம்.
பா.ஜனதா 1996-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தனிபெரும் கட்சியாக தேர்வானது. வாஜ்பாய் பிரதமராக பதவி ஏற்றார். ஆனால் நாடாளுமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாததால் 13 நாட்களுக்கு பின்பு அவர் பதவி விலகநேரிட்டது.
அதேபோல் ஜனாதிபதி பா.ஜனதாவை இந்த முறை ஆட்சி அமைக்க அழைத்தாலும், பத்து, பதினைந்து நாட்கள் அல்லது 3 வாரங்கள் கால அவகாசம் அளித்தாலும் அவர்களால் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியும் என நான் நம்பவில்லை. முன்னாள் பிரதமர் வாஜ்பாயை போல 13 நாட்களிலோ அல்லது 15 நாட்களிலோ ஆட்சியை விட்டு வெளியேற வேண்டி இருக்கும். இவ்வாறு சரத்பவார் கூறினார்.
Related Tags :
Next Story