மாவட்ட செய்திகள்

வேட்டவலத்தில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் + "||" + Dengue Fever Awareness Camp

வேட்டவலத்தில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம்

வேட்டவலத்தில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம்
வேட்டவலம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் நடந்தது.

வேட்டவலம், 

வட்டார மருத்துவ அலுவலர் சுமித்ரா தலைமை தாங்கினார். சித்த மருத்துவ அலுவலர் சதேஷ் முன்னிலை வகித்தார். டெங்கு காய்ச்சல் நோய் வராமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது. 

இதில் ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள், பகுதி சுகாதார செவிலியர், கிராம சுகாதார செவிலியர்கள், டெங்கு களப்பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.