மாவட்ட செய்திகள்

சரியான படவாய்ப்புகள் இல்லாததால் சினிமா நடன கலைஞர் தற்கொலை + "||" + Due to lack of proper film Cinema dancer Suicide

சரியான படவாய்ப்புகள் இல்லாததால் சினிமா நடன கலைஞர் தற்கொலை

சரியான படவாய்ப்புகள் இல்லாததால் சினிமா நடன கலைஞர் தற்கொலை
சரியான படவாய்ப்புகள் இல்லாததால் சினிமா நடன கலைஞர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பூந்தமல்லி,

சென்னை வடபழனி தனலட்சுமி காலனி, வெங்கடேஸ்வரா கோவில் தெருவில் உள்ள ஒரு அறையில் நண்பர்களுடன் வசித்து வந்தவர் செந்தில் (வயது 36). நடன கலைஞரான இவர், தமிழ் சினிமாவில் பாடல்களுக்கு நடனமாடும் குழுவில் நடனமாடி வந்தார்.


நேற்று முன்தினம் நண்பர்களுடன் வீட்டின் வெளியே நின்று பேசிக்கொண்டிருந்தார். திடீரென தனது அறைக்குள் சென்ற செந்தில் நீண்டநேரம் ஆகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது நண்பர்கள், அறைக்குள் சென்று பார்த்தபோது அங்கு செந்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்துவந்த விருகம்பாக்கம் போலீசார், செந்தில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், சரியான படவாய்ப்புகள் இல்லாததால் செந்திலுக்கு பணக்கஷ்டம் இருந்து வந்ததாகவும், மேலும் அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக செந்தில், தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

எனினும் அவரது தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? எனவும் போலீ சார் விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை