பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு
வேங்கிக்கால் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது.
திருவண்ணாமலை,
வேங்கிக்கால் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரகாஷ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயக்குமார், மோகன்குமார், சீனிவாசன், புவனேசன், நாராயணன் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர் வேங்கிக்கால் ஊராட்சி பகுதியில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அப்போது ஒரு சில கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.
Related Tags :
Next Story