மாவட்ட செய்திகள்

தேசிய டெங்கு காய்ச்சல் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் + "||" + National Dengue Eradication Awareness Camp

தேசிய டெங்கு காய்ச்சல் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்

தேசிய டெங்கு காய்ச்சல் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
செப்டாங்குளம் கிராமத்தில் தேசிய டெங்கு காய்ச்சல் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

சேத்துப்பட்டு, 

பெரணமல்லூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் செப்டாங்குளம் கிராமத்தில் தேசிய டெங்கு காய்ச்சல் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. வட்டார டாக்டர் அருண்குமார் தலைமை தாங்கினார். பெரணமல்லூர் டாக்டர் சீனிவாசன், சுகாதார மேற்பார்வையாளர் அன்பரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு பேசினார். முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு டெங்கு கொசுப்புழுக்களை உண்ணும் மீன்கள் வழங்கப்பட்டது.


அதிகம் வாசிக்கப்பட்டவை