வெவ்வேறு விபத்துகளில் முதியவர் உள்பட 2 பேர் சாவு
வெவ்வேறு விபத்துகளில் முதியவர் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஊத்தங்கரை,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள நல்லவம்பட்டியை சேர்ந்தவர் அய்யாதுரை. இவர் ஊத்தங்கரை அரசு போக்குவரத்து பணிமனையில் பஸ் கண்டக்டராக பணி புரிந்து வந்தார். சம்பவத்தன்று அய்யாதுரை நல்லவம்பட்டியில் இருந்து ஊத்தங்கரை நோக்கி மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். ரெட்டிப்பட்டி பிரிவு சாலை அருகே வந்த போது எதிர்பாராத விதமாக அய்யாதுரை நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து ஊத்தங்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
ஊத்தங்கரை பகுதியை சேர்ந்தவர் கண்ணாயிரம் (85). இவர் ஊத்தங்கரை-அனுமன்தீர்த்தம் செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற மினி லாரி எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த கண்ணாயிரம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து ஊத்தங்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story