தாம்பரத்தில் ஆதரவற்றோர் இல்ல மாணவர்களுக்கு போலீசார் உதவி
தாம்பரத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்ல மாணவர்களுக்கு போலீசார் உதவி பொருட்கள் வழங்கினர்.
தாம்பரம்,
சென்னை மாநகர போலீசில் சமுதாய சேவையாக ஆதரவற்றோர் இல்லங்களில் போலீசார் சார்பில் உணவு மற்றும் உதவி பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சிகள் சென்னை புறநகர் பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன்படி தாம்பரத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் தாம்பரம் சரக போலீசார் சார்பில் அங்குள்ள மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், பேக் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தென்சென்னை போலீஸ் இணை கமிஷனர் மகேஸ்வரி, பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் முத்துசாமி ஆகியோர் இதில் கலந்து கொண்டு ஆதரவற்றோர் இல்ல மாணவ, மாணவிகளுக்கு பள்ளி உபகரணங்களை வழங்கினர். இதில் தாம்பரம் போலீஸ் உதவி கமிஷனர் அசோகன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story