மாடம்பாக்கத்தில், வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகை கொள்ளை


மாடம்பாக்கத்தில், வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகை கொள்ளை
x
தினத்தந்தி 18 May 2019 3:30 AM IST (Updated: 18 May 2019 1:11 AM IST)
t-max-icont-min-icon

மாடம்பாக்கத்தில், வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகை கொள்ளை அடித்து சென்றனர்.

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த மாடம்பாக்கம் வள்ளலார் நகர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 52). இவர் கடந்த 13-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு சென்று இருந்தார். பின்னர் நேற்று முன்தினம் மதியம் வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 13 பவுன் தங்க நகை திருட்டு போனது தெரியவந்தது.

இதுகுறித்து சண்முகம் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story