சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே பறக்கும் ரெயில் சேவை ரத்து தெற்கு ரெயில்வே அறிவிப்பு


சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே பறக்கும் ரெயில் சேவை ரத்து தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x
தினத்தந்தி 17 May 2019 10:45 PM GMT (Updated: 17 May 2019 8:23 PM GMT)

பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே பறக்கும் ரெயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட பறக்கும் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

*சென்னை கடற்கரை- வேளச்சேரி காலை 8, 8.20, 8.40, 9, 9.20, 9.40, 9.50, 10, 10.20, 10.40, 11, 11.20, 11.40 மணி, மதியம் 12, 12.20, 12.40, 1, 1.20, 1.40 மணிக்கு புறப்படும் 19 பறக்கும் ரெயில்களும், மறுமார்க்கமாக வேளச்சேரி-சென்னை கடற்கரை காலை 8.10, 8.30, 8.50, 9.10, 9.30, 9.50, 10.10, 10.30, 10.40, 10.50, 11.10, 11.30, 11.50 மணி, மதியம் 12.10, 12.30, 12.50, 1.10, 1.30, 1.50 மணிக்கு புறப்படும் 19 பறக்கும் ரெயில்களும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story