மாவட்ட செய்திகள்

‘தினத்தந்தி’, ‘வசந்த் அன் கோ’ இணைந்து நடத்தும்வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி-விற்பனைசென்னையில் தொடங்கியது + "||" + Exhibition-sale of home appliances

‘தினத்தந்தி’, ‘வசந்த் அன் கோ’ இணைந்து நடத்தும்வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி-விற்பனைசென்னையில் தொடங்கியது

‘தினத்தந்தி’, ‘வசந்த் அன் கோ’ இணைந்து நடத்தும்வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி-விற்பனைசென்னையில் தொடங்கியது
‘தினத்தந்தி’ மற்றும் ‘வசந்த் அன் கோ’ இணைந்து நடத்தும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி-விற்பனை சென்னையில் நேற்று தொடங்கியது.
சென்னை,

‘தினத்தந்தி’, ‘வசந்த் அன் கோ’ இணைந்து நடத்தும் எலக்ட்ரானிக்ஸ், மொபைல் மற்றும் பர்னிச்சர் கண்காட்சி-விற்பனை சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது.

கண்காட்சி-விற்பனையை ‘வசந்த் அன் கோ’ நிறுவனத்தின் முதன்மை அதிகாரி சண்முகம், மூத்த மேலாளர் பிரெட்ரிக், கிரிஷ்குமார், ஹிட்டாச்சி நிறுவனத்தின் மண்டல மேலாளர் செந்தில், ‘அபி இம்போர்ட்ஸ்’ நிர்வாக இயக்குனர் லட்சுமணன் ஆகியோர் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி-விற்பனை நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை நடக்கிறது. காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம். அனுமதி இலவசம்.

ரூ.1 செலுத்தி ஏ.சி. வாங்கலாம்

கண்காட்சி-விற்பனையில் எல்.ஜி., சாம்சங், ஹிட்டாச்சி, ப்ளூஸ்டார், ஓனிடா, வோல்டாஸ், டைகின், வேர்ள்பூல், பானாசோனிக், கோத்ரேஜ், ஹையர், லாயிட், ஜெனரல் கேரியர், ஐ.எப்.பி. போன்ற அனைத்து முன்னணி ஏ.சி. தயாரிப்பு நிறுவனங்களின் மாடல்களும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பிட்ட ஏ.சி.களின் ஸ்டாண்டர்டு இன்ஸ்டாலேஷன் அந்த நிறுவனங்கள் மூலமாக இலவசமாக செய்து தரப்படுகிறது.

தற்போது கோடைக்காலம் என்பதால் ஏ.சி.க்கள் அதிகளவில் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களின் எண்ணங்களுக்கு ஏற்றாற்போல், பல்வேறு வண்ணங்களில், பல்வேறு டிசைன்களில் ஏ.சி.க்கள் குவிக்கப்பட்டுள்ளன.

ப்ளூஸ்டார், கேரியர், ஹையர், எல்.ஜி., ஹிட்டாச்சி, ஐ.எப்.பி., ஓனிடா, பானாசோனிக், டைகின், வேர்ள்பூல், கோத்ரேஜ் ஏ.சி.க்களை ரூ.1 மட்டும் செலுத்தி எடுத்துச்செல்லலாம். மீத தொகையை தவணை முறையில் 8 மாதங்களில் செலுத்தலாம். ரூ.1 மட்டும் செலுத்தி சாம்சங் ஏ.சி.யை எடுத்துச் செல்லலாம். மீதம் உள்ள தொகையை தவணை முறையில் 10 மாதங்களில் செலுத்தலாம்.

இதேபோல பல முன்னணி நிறுவனங்களின் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களும் இடம்பெற்றுள்ளன.

உலகத்தரம் வாய்ந்த பொருட்கள்

லேப்-டாப் வகைகள், மொபைல் போன்கள், மைக்ரோவேவ் ஓவன், எல்.இ.டி. டி.வி., ரெப்ரிஜிரேட்டர், வாஷிங்மெஷின், மிக்ஸி, கேஸ் ஸ்டவ், வாட்டர் பியூரிபையர், உயர் தரம் வாய்ந்த பர்னிச்சர்கள், அனைத்து விதமான வீட்டு உபயோக பொருட்களும் கண்காட்சியை அலங்கரிக்கின்றன.

பஜாஜ் பின்செர்வ் நிறுவனத்தின் எளிமையான பைனான்ஸ் நடைமுறைகள் மூலம் சுலபமாக பொருட்களை வாங்கலாம். ஈ.எம்.ஐ. கார்டு மூலம் ஏ.சி. வாங்குபவர்களுக்கு ‘6 பீஸ் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டின்னர் செட்’ இலவசமாக வழங்கப்படுகிறது.

கோடக் மஹிந்திரா வங்கி மூலம் தவணை முறையில் ஏ.சி. வாங்குபவர்களுக்கு ஆயிரம் ரூபாய் ‘கேஷ் ரிவார்டு’ வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட பிராண்டுகளை சேர்ந்த பொருட்களுக்கு 15 சதவீதம் வரை ‘கேஷ் பேக்’ வழங்கப்படுகிறது. கண்காட்சி-விற்பனையில் முன்னணியில் உள்ள 4 சக்கர வாகனங்களும் இடம் பெற்றுள்ளன.

பல்வேறு அரங்குகளில் உலகத்தரம் வாய்ந்த வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் ஒரே இடத்தில் நிறைவாய் பொதுமக்கள் வாங்குவதற்கு ஏற்ற வகையில் இந்த கண்காட்சி-விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

‘கேஷ் பேக்’

கோடைகால சிறப்பு தள்ளுபடி வருமாறு:-

* 1 டன் ஸ்பிளிட் ஏ.சி. ரூ.23,990-க்கும், 1.5 டன் ஸ்பிளிட் ஏ.சி. 27,990-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றுக்கு ஸ்டாண்டர்டு இன்ஸ்டாலேஷன் இலவசம்.

* டைகின் 1.5 டன் ஸ்பிளிட் ஏ.சி. ரூ.30,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு ஸ்டாண்டர்டு இன்ஸ்டாலேஷன் ரூ.590 மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

* எஸ்.பி.ஐ. கிரெடிட் கார்டுகளுக்கு 5 சதவீத ‘கேஷ் பேக்’ சலுகை உண்டு.

* அனைத்து மாடல் ஏ.சி.களுடன் ரூ.4,500 மதிப்புள்ள டவர் பேன் அல்லது ரூ.3,990 மதிப்புள்ள 2 பர்னர் கிளாஸ் டாப் கியாஸ் ஸ்டவ் இலவசமாக வழங்கப்படுகிறது.

டவர் பேன் இலவசம்

* உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை கண்டுகளிக்கும் வகையில் அனைத்து வகையான எல்.இ.டி. டி.வி.களும் தள்ளுபடி விலையில், 36 மாத தவணையில் வழங்கப்படுகின்றன.

* வாஷிங் மெஷின் மற்றும் பிரன்டு லோடிங் வாஷிங் மெஷினுக்கு மாத தவணையாக ரூ.2,074 செலுத்தினால் போதும்.

* ரூ.1 லட்சத்துக்கும் மேல் பொருட்கள் வாங்குபவர்களுக்கு ரூ.4,500 மதிப்புள்ள டவர் பேன் இலவசம்.

சுலப தவணை

* இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உயர் ரக தேக்கு மர கட்டில்கள், லெதர் ஷோபா செட்டுகள், ரெக்லனைர்கள், ஜெய்ப்பூரில் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட கார்விங் வேலைப்பாடுகளுடன் கூடிய ஷோபா செட்டுகள், வீடு மற்றும் அலுவலகங்களுக்கு தேவையான அனைத்து பர்னிச்சர்களும் வட்டி இல்லாமல் சுலப தவணையில் அபி இம்போர்ட்சில் வாங்கலாம்.

* பழைய பர்னிச்சர்களை கொடுத்து மாருதி பர்னிச்சர் நிறுவனத்தில் புதிய பொருட்களை வாங்கலாம். பழைய பர்னிச்சர்களுக்கு குறைந்தது ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது. பர்னிச்சர்களுக்கு 50 சதவீத தள்ளுபடியும் அளிக்கப்படுகிறது.

* ரூ.20 ஆயிரம் மற்றும் அதற்கு மேல் பர்னிச்சர் வாங்குபவர்களுக்கு தங்க காசும், ரூ.40 ஆயிரம் மற்றும் அதற்கும் மேல் மதிப்புள்ள பர்னிச்சர் வாங்குபவர்களுக்கு பீன் பேக்கும் வெற்றி அப்ளையன்சஸ் நிறுவனம் சார்பில் இலவசமாக வழங்கப்படுகிறது.

* குறிப்பிட்ட மாடல் ஸ்மார்ட் போன்களுக்கு 70 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

அதிகம் வாசிக்கப்பட்டவை