மாவட்ட செய்திகள்

விவசாய நிலங்களில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் ஆபத்து + "||" + Danger of electric wires low height on agricultural lands

விவசாய நிலங்களில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் ஆபத்து

விவசாய நிலங்களில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் ஆபத்து
எஸ்.புதூர் ஒன்றியம் கே.உத்தம்பட்டியில் விவசாய நிலங்களில் தாழ்வாக செல்லும் உயர்மின் அழுத்த கம்பிகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

எஸ்.புதூர்,

எஸ்.புதூர் ஒன்றியம் கே.உத்தம்பட்டியில் விவசாயம் பிராதான தொழிலாக உள்ளது. இதனால் அதிகாலையில் தங்களது விவசாய நிலங்கள், தோட்டங்களுக்கு செல்லும் விவசாயிகள் இரவு வீடு திரும்புவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்தநிலையில் விவசாய நிலங்களில் வழியாக உயர் அழுத்த மின்கம்பிகள் செல்கின்றன.

இந்த மின்கம்பிகள் வெகுதூரம் கொண்டு செல்லப்படுவதால், விளை நிலங்களின் மத்தியில் செல்வது தவிர்க்க முடியாததாகி விட்டது. மேலும் இந்த மின்கம்பிகள் அமைக்கப்பட்ட போது, நன்றாக இழுத்து கட்டப்பட்டு இருந்தன. ஆனால் நாட்கள் செல்ல செல்ல தாழ்வாக செல்கிறது.

கடந்த 6 மாதங்களாக விவசாயம் செய்துள்ள நிலங்கள் வழியாக செல்லும் இந்த உயர்மின் அழுத்த கம்பிகள் மிகத்தாழ்வாக செல்வதால் இதன் வழியாக செல்லும் விவசாயிகள் ஒரு வித அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் விவசாயிகள் இரவில் வீடு திரும்பும் போது தங்களது தலையில் கால்நடைகளுக்கு தேவையான தீவனம் மற்றும் வைக்கோல்களை சுமந்து கொண்டு வரும் போது எளிதில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் தெரியப்படுத்தியும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர். எனவே பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு இந்த குறையை சரிசெய்ய வேண்டுமென அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. வங்கியில் கடன் வாங்காதவருக்கு ரூ.3.90 லட்சம் கடன் வாங்கியதாக நோட்டீஸ் விவசாயி அதிர்ச்சி
வங்கியில் கடன் வாங்காத விவசாயிக்கு ரூ.3 லட்சத்து 90 ஆயிரம் கடன் வாங்கியதாக வங்கி நிர்வாகம் அனுப்பிய நோட்டீசால் விவசாயி அதிர்ச்சி அடைந்தார்.
2. சொத்து பிரச்சினையில் தகராறு: தம்பிக்கு அரிவாள் வெட்டு; விவசாயி கைது
குத்தாலம் அருகே சொத்து பிரச்சினையில் ஏற்பட்ட தகராறில் தம்பியை அரிவாளால் வெட்டிய விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
3. குமாரமங்கலம்–ஆதனூர் இடையே ரூ.400 கோடியில் தடுப்பணை கட்டும் பணி தீவிரம்; விவசாயிகள் மகிழ்ச்சி
குமாரமங்கலம்–ஆதனூர் இடையே ரூ.400 கோடியில் தடுப்பணை கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
4. விவசாயி கொலை வழக்கு: தொழிலாளி கைது
விவசாயி கொலை வழக்கில் தொழிலாளி ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
5. வெவ்வேறு சம்பவங்களில் விவசாயி உள்பட 3 பேர் தற்கொலை
வெவ்வேறு சம்பவங்களில் விவசாயி உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.