தஞ்சை அருகே, மோட்டார் சைக்கிளில் சென்ற பெயிண்டர், லாரி மோதி பலி
தஞ்சை அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற பெயிண்டர் லாரி மோதி பலியானார்.
கள்ளப்பெரம்பூர்,
தஞ்சை அருகே உள்ள வல்லம் ஆலக்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயராமன். இவருடைய மகன் ஆனந்த்(வயது 26). பெயிண்டரான நேற்று அதிகாலை 3 மணியளவில் இவர், திருவையாறில் ஒரு திருமண வீட்டில் பெயிண்டிங் வேலை பார்த்து விட்டு மோட்டார் சைக்கிளில் திருவையாறில் இருந்து பள்ளியக்ரஹாரம்-பிள்ளையார்பட்டி பைபாஸ் சாலையில் 8-ம் நம்பர் கரம்பை அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது அரியலூரில் இருந்து சிமெண்ட் ஏற்றி கொண்டு புதுக்கோட்டைக்கு சென்ற லாரி, முன்னால் சென்று கொண்டிருந்த ஆனந்தின் மோட்டார் சைக்கிள் மீது மோதி அதே வேகத்தில் அருகில் இருந்த வயலில் கவிழ்ந்தது.
இதில் லாரி சக்கரத்தில் சிக்கிய ஆனந்த், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். லாரி டிரைவர் அரியலூர் மாவட்டம் கண்ணகிபுரத்தை சேர்ந்த ஜென்னிஸ் படுகாயம் அடைந்து தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story