திருவள்ளூர் அருகே மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் சாவு
திருவள்ளூர் அருகே மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த வெங்கத்தூர் கண்டிகையை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் கிருஷ்ணகுமார் (வயது 17). இவர் வேப்பம்பட்டில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கிருஷ்ணகுமார் திருவள்ளூரை அடுத்த காக்களூரில் உள்ள ஒரு வீட்டுக்கு எலக்ட்ரிக்கல் வேலை செய்ய சென்றார். வேலை செய்து கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவரை அங்கு இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அவ்வாறு செல்லும் வழியிலேயே கிருஷ்ணகுமார் பரிதாபமாக இறந்து போனார்.
இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story