மயிலாடுதுறையில் வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடுகள் தீவிரம் கலெக்டர் தகவல்
மயிலாடுதுறையில், வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்தார்.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறைகளில் வைத்து பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன. அதற்கு 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதனை நேற்று முன்தினம் நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து கலெக்டர், நிருபர்களிடம் கூறியதாவது:-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வாக்கு எண்ணும் மையத்தில் அனைத்து விதமான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான மேஜை, நாற்காலிகள் போடப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள் ளன. வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள முகவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்குதல், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பயிற்சி வழங்குதல், பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்ற முன்னேற்பாடு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வாக்கு எண்ணிக்கை சுமுகமாகவும், அமைதியாகவும் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story