செங்கல் சூளைகளில் இருந்து கொத்தடிமைகள் மீட்பு உரிமையாளர்கள் 3 பேர் மீது வழக்கு


செங்கல் சூளைகளில் இருந்து கொத்தடிமைகள் மீட்பு உரிமையாளர்கள் 3 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 18 May 2019 10:15 PM GMT (Updated: 18 May 2019 7:38 PM GMT)

கபிஸ்தலம் அருகே செங்கல் சூளைகளில் இருந்து கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்கப்பட்டது தொடர்பாக செங்கல் சூளை உரிமையாளர்கள் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கபிஸ்தலம்,

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள தேவன்குடி கிராமத்தில் கடலூர், அரியலூர், மற்றும் தஞ்சை மாவட்டங்களை சேர்ந்த சுமார் 20 குடும்பங்களை சேர்ந்த 43 பேர் செங்கல் சூளைகளில் கொத்தடிமைகளாக பல ஆண்டுகளாக வேலை பார்த்து வருவதாக கும்பகோணம் உதவி கலெக்டர் வீராசாமிக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் பாபநாசம் தாசில்தார் கண்ணன், துணை தாசில்தார் தர்மராஜ், வருவாய் ஆய் வாளர்கள் நேரில் சென்று அங்குள்ள செங்கல் சூளைகளில் கொத்தடிமைகளாக பணியாற்றிய 20 குடும்பங்களை சேர்ந்த 43 பேரை கடந்த 16-ந் தேதி மீட்டனர். மீட்கப்பட்ட தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

வழக்குப்பதிவு

இதுகுறித்து வீரமாங்குடி கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியன் கபிஸ்தலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார், பல ஆண்டு காலமாக தஞ்சாவூர் மற்றும் கடலூர், அரியலூர், மாவட்டத்தை சேர்ந்த சுமார் 43 பேரை கொத்தடிமை களாக செங்கல் சூளையில் வேலை வாங்கி வந்த செங்கல் சூளை உரிமையாளர்கள் கீழவரப்பக்குறிச்சி பொன்னுசாமி மகன் சேகர், தேவன்குடி கார்த்திகேயன் மகன் பூங்குன்றன், அரியலூர் மாவட்டம் கோவிலூர் மாரியப்பன் மகன் மணி ஆகிய மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.

Next Story