நடுக்கடலில் மீனவர்கள் இடையே மோதல் - 20 பேர் மீது வழக்கு


நடுக்கடலில் மீனவர்கள் இடையே மோதல் - 20 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 19 May 2019 3:45 AM IST (Updated: 19 May 2019 3:36 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம், பெரியபட்டணம் பகுதி நடுக்கடலில் மோதலில் ஈடுப்பட்ட மீனவர்கள் 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ராமநாதபுரம்,

மண்டபத்தை சேர்ந்த மீனவர்கள் முஸ்தபா(வயது 50), இர்சத்கான்(23) ஆகியோர் பெரியபட்டணம் பகுதி கடலில் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது பெரியபட்டணம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் முத்துச்சாமி, அயூப் உள்பட பலர் அங்கு சென்று அவர்களிடம் இங்கு வந்து ஏன் மீன் பிடிக்கிறீர்கள்? இனிமேல் இந்த பகுதிக்கு மீன்பிடிக்க வரக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனராம். இதனால் அவர்களுக்கிடையே நடுக்கடலில் மோதல் ஏற்பட்டது. இதில் காயமடைந்த மீனவர் இர்சத்கான் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து மண்டபம் கடலோர போலீசார் அளித்த தகவலின் பேரில் பெரியபட்டணத்தை சேர்ந்த முத்துச்சாமி, அயூப் உள்பட 20 பேர் மீது திருப்புல்லாணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

Next Story