அரவக்குறிச்சி தொகுதியில் 84.33 சதவீதம் வாக்குப்பதிவு கொளுத்தும் வெயிலிலும் ஆர்வத்துடன் வந்து ஓட்டுப்போட்ட வாக்காளர்கள்
அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில் 84.33 சதவீதம் வாக்குப்பதிவானது. கொளுத்தும் வெயிலிலும் ஆர்வத்துடன் வந்து பொதுமக்கள் ஓட்டுப்போட்டு சென்றனர்.
அரவக்குறிச்சி,
கரூர் மாவட்டம் அரவக் குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்தது. அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 99 ஆயிரத்து 52 ஆண்களும், 1 லட்சத்து 6 ஆயிரத்து 219 பெண்களும், திருநங்கைகள் 2 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 5 ஆயிரத்து 273 வாக்காளர்கள் உள்ளனர்.
இவர்கள் வாக்குப்பதிவு செய்ய வசதியாக மொத்தம் 159 இடங்களில் 250 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் 29 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டிருந்தன. இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் செந்தில்நாதன், தி.மு.க. சார்பில் செந்தில்பாலாஜி, அ.ம.மு.க. சார்பில் சாகுல்ஹமீது, மக்கள் நீதி மய்யம் கட்சியில் மோகன்ராஜ், நாம் தமிழர் கட்சி சார்பில் செல்வம் உள்பட 63 பேர் போட்டியிட்டனர்.
அரவக்குறிச்சி தாசில்தார் அலுவலகத்தில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், ‘விவிபேட்’ கருவிகள் மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தும் நேற்று முன்தினம் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு நேற்று முன் தினம் மாலையே ஊழியர்கள் சென்று தங்கினர்.
நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. முன்னதாக மாதிரி வாக்குப்பதிவு நடந்தது. இதில் வேட்பாளர்களின் முகவர்கள், மைய அலுவலர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டன. அதன்பின் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியதும் வாக்காளர்கள் ஓட்டுப்போட அனுமதிக்கப்பட்டனர்.
தேர்தலில் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வாக்காளர்கள் பலர் ஆர்வத்துடன் காலை 6.30 மணிக்கே வரத்தொடங்கினர். அவர்கள் வாக்குச்சாவடிகள் முன் வரிசையாக காத்திருந்தனர். வாக்குச்சாவடிகள் முன் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனி வரிசை அமைக்கப்பட்டிருந்தது.
மேலும் வாக்குச்சாவடி மையங்களுக்கு முன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவ படையினர் வாக்குச்சாவடி நுழைவு வாயிலில் நின்று வாக்காளர்களை வரிசைப்படுத்தி அனுப்பினர்.
வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையுடன் வாக்களிக்க வந்திருந்தனர். வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம் உள்பட தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்டிருந்த ஆவணங்களை எடுத்து வந்திருந்தனர்.
வாக்குச்சாவடி மையங்களுக்கு முன்னதாக 200 மீட்டர் தூரத்தில் அரசியல் கட்சியினர் தற்காலிகமாக பந்தல் அமைத்தும், மேஜைகள் அமைத்தும் வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி மைய எண், பாகம் எண் குறித்து கூறி அனுப்பினர். மேலும் சிலர் தங்களது அரசியல் கட்சி சின்னத்திற்கும் வாக்களிக்குமாறு எடுத்துக்கூறியதையும், வேட்பாளர்களின் சின்னங்களை கையில் ஏந்தியபடி நின்றதையும் பல இடங்களில் காண முடிந்தன.
வாக்காளர்கள் வாக்குச் சாவடி மையத்திற்குள் சென்றதும் அவர்களது பெயர், விவரம் அடையாள அட்டை சரிபார்க்கப்பட்ட பின், இடது கையில் நடு விரலில் மை வைக்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் அவர்கள் வாக்கினை பதிவு செய்தனர்.
மேலும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்ய கூடிய ‘விவிபேட்’ எந்திரத்தில் விழுந்த சீட்டினையும் அவர்கள் பார்த்து கொண்டனர். அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, தென்னிலை, சின்னதாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். நேரம் நேரம் செல்ல மக்கள் சாரை, சாரையாக வந்து ஓட்டுப்போட்டனர்.
பெண்களும் ஆர்வமுடன் வந்து தங்களது ஜனநாயக கடமையாற்றினர். சில பெண்கள் கைக்குழந்தைகளுடனும் ஓட்டுப்போட வந்தனர். வயதானவர்கள் முதுமையிலும் தளராமல் மற்றவர்கள் உதவியுடன் ஆர்வமாக வந்து வாக்களித்தனர். உடல் நலக்குறைவு மற்றும் நடக்க முடியாமல் இருந்தவர்களை அவர்களது குடும்பத்தினர் கார் மற்றும் வாகனங்களில் அழைத்து வந்ததை காண முடிந்தது.
அக்னி நட்சத்திரம் கொளுத்துகிற நிலையில் கரூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் கொளுத்தும் வெயிலிலும் மக்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்து தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.
வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க சிலர் குடைகளை பிடித்தப்படியும், பெண்கள் சிலர் சேலை மற்றும் துப்பட்டாவால் தலையை மூடியபடி வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்தனர். வாக்காளர்களுக்கு வசதியாக வாக்குச்சாவடி மையங்களில் சாமியானா பந்தலும் அமைக்கப்பட்டிருந்தன. குடிநீர் வசதிகளும் செய்யப்பட்டிருந்தது.
மாற்றுத்திறனாளிகள் மற்றும் உடல் நலம் குன்றியவர்கள், முதியவர்கள் வாக்களிக்க வசதியாக சக்கர நாற்காலி வசதிகளும் இருந்தன. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும் முதியவர்களுக்கு உதவி செய்தனர். பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி ஒரே மையத்தில் 12 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
பள்ளப்பட்டி பகுதியில் முஸ்லிம்கள் பெருவாரியாக வசிக்கின்றனர். அவர்களில் பலர் தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து வந்து தங்களது வாக்கினை பதிவு செய்தனர். நோன்பு காலத்திலும் அவர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்ததை காணமுடிந்தது. எங்கு திரும்பினாலும் வாக்காளர்கள் கூட்டமாக காணப்பட்டது.
வாக்குச்சாவடிகள் முன்பு நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்கினை பதிவு செய்தனர். அந்த வாக்குச்சாவடி பதற்றமானதில் ஒன்று என்பதால் பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசாரும், துணை ராணுவ படையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். வாக்காளர்களை தவிர வேறு நபர்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.
அரவக்குறிச்சி தொகுதியில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறு, விறுப்பாக நடந்தது. தொகுதி முழுவதும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டன. மற்ற வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டிருந்தன.
சில வாக்குச்சாவடி மையங்கள் முன்பு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தங்களது கேமராவில் பதிவு செய்ததை காணமுடிந்தது. தொகுதியில் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டனர். காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, புஞ்சை புகளூர், ஈசத்தம் ஆகிய இடங்களில் மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைகிற நேரத்தில் வாக்காளர்கள் கூட்டம் இருந்ததால் அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. அவர்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர். வாக்குப்பதிவு முடிவடைந்ததும் மின்னணு எந்திரங்கள் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். அதன்பின் எந்திரங்கள் அனைத்தும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேன் மற்றும் லாரிகளில் தளவாபாளையத்தில் உள்ள குமாரசாமி என்ஜினீயரிங் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.
வாக்குப்பதிவின் போது 2 மணி நேரத்திற்கு ஒரு முறை வாக்குப்பதிவு சதவீத விவரம் வெளியிடப்பட்டது. இறுதியில் மொத்தம் 84.33 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன. ஆண் வாக்காளர்கள் 81 ஆயிரத்து 143 பேரும், பெண் வாக்காளர்கள் 91 ஆயிரத்து 972 பேரும் என மொத்தம் ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 115 பேர் வாக்களித்துள்ளனர்.
கடந்த 2016-ம் ஆண்டு நவம்பரில் அரவக்குறிச்சியில் நடந்த தேர்தலில் 2 லட்சத்து 352 பேர் வாக்காளர்களாக இருந்தனர். இதில் 1 லட்சத்து 64 ஆயிரத்து 582 பேர் வாக்களித்தது குறிப்பிடத்தக்கது ஆகும். அந்த தேர்தலில் மொத்த வாக்குப்பதிவு 82 சதவீதமாகும். கடந்த தேர்தலை விட இந்த இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு 2.33 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story