லாரி டிரைவர் கொலைவழக்கில் மேலும் ஒருவர் கைது


லாரி டிரைவர் கொலைவழக்கில் மேலும் ஒருவர் கைது
x
தினத்தந்தி 20 May 2019 4:00 AM IST (Updated: 20 May 2019 4:58 AM IST)
t-max-icont-min-icon

புதுவை லாரி டிரைவர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

புதுச்சேரி, 

புதுவை முதலியார்பேட்டை தாசில்தார் அலுவலகம் அருகே உள்ள கழிவுநீர் வாய்க்காலில் கடந்த 6-ந்தேதி சாக்குமூட்டையில் கட்டிய நிலையில் ஆண் பிணம் கிடந்தது. அதை கைப்பற்றிய முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பிணமாக கிடந்தது நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் கமலக்கண்ணன் (வயது 35) என்பது தெரியவந்தது. அவரை அவருடைய மனைவி ஸ்டெல்லா மற்றும் சிலர் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. மனைவியின் நடத்தையை கண்டித்ததால் அவரை கொலை செய்திருப்பதும் தெரியவந்தது.

மேலும் இந்த கொலையில் ஸ்டெல்லாவின் சகோதரி ரெஜினா, ஆண் நண்பர் தமிழ்மணி மற்றும் அவரது நண்பர்களும் சம்பந்தப்பட்டு இருப்பது தெரிய வந்தது. ஸ்டெல்லாவை கைது செய்த போலீசார் மற்றவர்களை தேடிவந்தனர். இந்தநிலையில் தமிழ்மணியின் நண்பரான அரியாங்குப்பத்தை சேர்ந்த விமல்ராஜ் என்பவரை கைது செய்தனர். அவர் கமலக்கண்ணனின் பிணத்தை எடுத்து செல்ல உதவியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து விமல்ராஜை நீதிபதி முன்பு ஆஜர்படுத்திய போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். தமிழ்மணி உள்ளிட்டவர்களை தொடர்ந்து தேடிவருகிறார்கள்.

Next Story