ராணுவத்தில் பல்மருத்துவர் பிரிவில் ஆட்சேர்க்கை


ராணுவத்தில் பல்மருத்துவர் பிரிவில் ஆட்சேர்க்கை
x
தினத்தந்தி 20 May 2019 4:44 AM GMT (Updated: 20 May 2019 4:44 AM GMT)

ராணுவத்தில் பல் மருத்துவ பிரிவில் அதிகாரி பணிக்கு தகுதியானவர்களை சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்திய ராணுவத்தில், தகுதியான இளைஞர்கள் பல்வேறு சிறப்பு பயிற்சி நுழைவின் அடிப்படையில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். தற்போது ‘ஆர்மி டென்டல் கார்ப்ஸ்’ எனும் மருத்துவ பிரிவில் பல் மருத்துவர்களை சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 65 பேர் சேர்க்கப்படுகிறார்கள். இதில் சேர்வதற்கான தகுதிகளை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 31-12-2019-ந் தேதியில் 45 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி:

பி.டி.எஸ்., எம்.டி.எஸ். மருத்துவம் படித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். பி.டி.எஸ். இறுதி வருடத்தில் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருப்பது அவசியம். பல் மருத்துவ கவுன்சிலில் பெயரை பதிவு செய்து வைத்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

எம்.டி.எஸ். நீட் தேர்வு 2019 மதிப்பெண்கள் கருத்தில் கொள்ளப்படும், நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மருத்துவ பரிசோதனையும் நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

இணையதளம் வழியாகவே இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்க முடியும். 10-6-2019-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து வைத்துக்கொள்ளவும்.

விண்ணப்பிக்கவும், மேலும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.indianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.


Next Story