கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆய்வு மேற்கொண்டார்.
நாகர்கோவில்,
இந்தியா முழுவதும் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளில் வேலூர் தொகுதி நீங்கலாக 542 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 11–ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இதற்கான முடிவுகளை அறிவதற்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளது. நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் நடைபெற இருக்கிறது.
அதேபோல் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நாகர்கோவில் கோணத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற உள்ளது. கடந்த மாதம் 18–ந் தேதி இந்த தொகுதியில் வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் ஒப்புகைச்சீட்டுகள் அடங்கிய வி.வி.பேட் கருவிகள் அனைத்தும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைந்துள்ள பாதுகாப்பு அறைகளில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இதையொட்டி கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். அதைத்தொடர்ந்து சட்டமன்ற தொகுதி வாரியாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கும். கன்னியாகுமரி மற்றும் குளச்சல் சட்டசபை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 12 மேஜைகளிலும், நாகர்கோவில், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 4 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 10 மேஜைகளிலும் நடைபெற இருக்கிறது. மொத்தம் 28 சுற்றுகளாக இந்த வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
மேலும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி ஒரு சட்டசபை தொகுதிக்கு 5 வாக்குச்சாவடிகள் என்ற அடிப்படையில் 30 வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளும், ஒப்புகைச்சீட்டுகளும் ஒப்பிட்டுப் பார்க்கப்படும். இந்த 30 வாக்குச்சாவடிகள் எவை? எவை? என்பது வாக்கு எண்ணிக்கை அன்று குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும். மேலும் வாக்குப்பதிவு அன்று சோதனை வாக்குப்பதிவின்போது அழிக்காமல் விடப்பட்டு விளவங்கோடு, கிள்ளியூர் தொகுதிகளுக்கு உட்பட்ட 3 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் ஒப்புகைச்சீட்டுகள் மூலம் எண்ணப்பட இருக்கின்றன.
இந்தநிலையில் வாக்கு எண்ணும் மையத்தில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக கலெக்டர் பிரசாந்த் வடநேரே, போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் ஆகியோர் நேற்று காலை நேரில் ஆய்வு செய்தனர்.
அப்போது ‘பேரிகாட்‘ தடுப்புகள் எங்கெங்கு அமைக்கப்பட்டுள்ளன? மேலும் அமைக்கப்பட வேண்டிய இடங்கள்? ஒவ்வொரு சட்டசபை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள பேரிகாட் தடுப்புகள் பாதுகாப்பானதாக உள்ளதா? அங்கு வேட்பாளர்களின் முகவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடம், அவர்கள் செல்லும் பாதை, வாக்கு எண்ணும் மையத்துக்கு முகவர்கள் கொண்டு வரும் செல்போன்களை ஒப்படைக்கக்கூடிய பகுதி, குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ள பகுதிகள் ஆகியவற்றை பார்வையிட்டனர். வாக்கு எண்ணிக்கை நிலவரத்தை அறிந்து கொள்ள வரும் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் நிறுத்தி வைக்கப்படும் பகுதி, வாக்கு எண்ணிக்கை நிலவரங்களை அறிவிப்பு செய்வதற்கு வசதியாக ஒலிபெருக்கிகள் அமைக்கப்பட்டுள்ள இடங்கள், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகள், வாக்கு எண்ணும் வளாகம், வளாகத்துக்கு வெளியே எந்தெந்த பகுதிகளில் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடச் செய்வது? என்பது போன்றவை குறித்து அவர்கள் ஆய்வு செய்தனர்.
வாக்கு எண்ணிக்கை தினத்தன்று மாவட்டம் முழுவதும் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும், பெரும்பாலான போலீசார் வாக்கு எண்ணிக்கை மையத்திலும், அந்தந்த போலீஸ் நிலைய போலீசார் அந்தந்த பகுதிகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் கூறினார்.

Related Tags :
Next Story