திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி, வாக்கு எண்ணிக்கை பாதுகாப்புக்கு 786 போலீசார்
திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு பணியில் 786 போலீசார் ஈடுபட உள்ளனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி மற்றும் இடைத்தேர்தல் நடந்த நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) அண்ணா பல்கலைக்கழக திண்டுக்கல் பொறியியல் கல்லூரியில் எண்ணப்படுகின்றன. இதற்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், சட்டமன்ற தொகுதி வாரியாக தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டு உள்ளன. இந்த வாக்கு எண்ணும் மையத்துக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
அதில் கட்டிடத்தின் உள்ளே வாக்குப்பதிவு எந்திரங்கள் இருக்கும் அறைகளுக்கு துணை ராணுவ வீரர்கள் 14 பேர் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படை போலீசார் 20 பேரும், ஆயுதப்படை போலீசார் 7 பேர், 3 இன்ஸ்பெக்டர்கள், 6 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் ஒரு துணை சூப்பிரண்டு தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
மேலும் கட்டிடத்தின் வெளியே ஒரு துணை சூப்பிரண்டு தலைமையில் 4 இன்ஸ்பெக்டர்கள், 7 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணிக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். இதன்மூலம் மொத்தம் 274 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இவர்கள் அனைவரும் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். வாக்கு எண்ணும் நாளில் அனைவரும் பணிக்கு வருவார்கள்.
இதற்கிடையே வாக்கு எண்ணும் நாளில் பாதுகாப்புக்கு கூடுதலாக போலீசார் குவிக் கப்பட உள்ளனர். அதன்படி 6 துணை சூப்பிரண்டுகள், 20 இன்ஸ்பெக்டர்கள், 73 சப்- இன்ஸ்பெக்டர்கள், 313 போலீஸ்காரர்கள், 100 ஆயுதப்படை போலீசார் என மொத்தம் 512 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதன்மூலம் வாக்கு எண்ணும் நாளில் மொத்தம் 786 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story