கோர்ட்டில் பீரோவை உடைத்து ஆவணங்களை எடுக்க முயன்றதாக உதவியாளர் மீது வழக்கு
கோர்ட்டில் பீரோவை உடைத்து ஆவணங்களை எடுக்க முயன்றதாக உதவியாளர் மீது வழக்கு.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஜுடிசியல் மாஜிஸ்திரேட் எண்–1 கோர்ட்டில் தனஞ்செயன்(வயது 42) என்பவர் தலைமை எழுத்தராக பணிபுரிந்து வருகிறார். இந்த கோர்ட்டில் உடையார்பாளையம் லப்பை மகன் அலாவுதீன்(33) என்பவர் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை, அங்கு வழக்குகள் சம்பந்தமான ஆவணங்கள் இருந்த பீரோ திறந்து கிடந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த தனஞ்செயன், ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அலாவுதீன் பீரோவை திறந்து பார்த்துக்கொண்டிருந்ததாக தெரியவந்தது. இதையடுத்து பீரோவை உடைத்து ஆவணங்களை எடுக்க முயன்றதாக, அலாவுதீன் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story