சிறுவனுடன் ஓரினச்சேர்க்கை: கட்டிட காவலாளிக்கு 7 ஆண்டு கடுங்காவல்


சிறுவனுடன் ஓரினச்சேர்க்கை: கட்டிட காவலாளிக்கு 7 ஆண்டு கடுங்காவல்
x
தினத்தந்தி 21 May 2019 4:27 AM IST (Updated: 21 May 2019 4:27 AM IST)
t-max-icont-min-icon

தானே மாவட்டம் மிரா ரோட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை பார்த்து வந்தவர் சுனில் சாகில் (வயது34).

தானே,

சுனில் சாகில்  அந்த கட்டிடத்தில் வசித்து வரும் 10 வயது சிறுவனை தனது அறைக்கு அழைத்துச் சென்று ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவன் பெற்றோரிடம் கூறினான். அவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் சுனில் சாகிலை கைது செய்து தானே கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணை நிறைவில் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து தீர்ப்பு கூறிய கோர்ட்டு காவலாளி சுனில் சாகிலுக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.

Next Story