நினைவுநாள் அனுசரிப்பு ராஜீவ்காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் அஞ்சலி


நினைவுநாள் அனுசரிப்பு ராஜீவ்காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் அஞ்சலி
x
தினத்தந்தி 21 May 2019 11:00 PM GMT (Updated: 21 May 2019 4:28 PM GMT)

நினைவு நாளையொட்டி ராஜீவ்காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

சென்னை,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவுநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடம் மலர்களால் அலங்கரிக் கப்பட்டு இருந்தது. பழங்கள், குளிர்பானங்கள் வைக்கப்பட்டு இருந்தன. நினைவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி மலர் வளையம் வைத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அவரது தலைமையில் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. சர்வ மத பிரார்த்தனையும் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பாக மருத்துவ முகாமும் நடைபெற்றது. நினைவிடத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசர், தங்கபாலு, கிருஷ்ணசாமி, குமரிஅனந்தன், முன்னாள் எம்.எல்.ஏ. யசோதா, தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கராத்தே தியாகராஜன், ராஜீவ் நினைவிட பொறுப்பாளர் முருகானந்தம், மாநில எஸ்.சி., எஸ்.டி. தலைவர் செல்வபெருந்தகை, காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தலைவர் ரூபி மனோகரன், ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் கட்சி தலைவர் அருள்ராஜ், மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தலைவர் அய்யப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக கர்நாடக மாநில தொழிற்சங்க தலைவர் பிரகாசம் தலைமையில் ராஜீவ் அமைதி ஜோதி கர்நாடகாவில் இருந்து யாத்திரையாக ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி நினைவிடத்துக்கு கொண்டுவரப்பட்டது. உசிலம்பட்டி முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை சைக்கிள் மூலம் ராஜீவ்காந்தி நினைவு பயணத்தை தொடர்ந்த கருப்பையாவை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் அசன் வாழ்த்தினார். இளைஞர் காங்கிரஸ் கட்சி காஞ்சீபுரம் மாவட்ட தலைவர் ஜாபர் ஷா, மாவட்ட துணைத்தலைவர் செந்தில்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Next Story