ஏரிகள் வறண்டன: சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் குறைவதால் மக்கள் பீதி தலைநகரை அச்சுறுத்தும் குடிநீர் பிரச்சினை
செம்பரம்பாக்கம், சோழவரத்தை தொடர்ந்து புழல் ஏரியும் வறண்டுவிட்டதுடன், சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் குறைவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். நிலைமையை சமாளிக்க மாற்று வழிகளில் தண்ணீர் கொண்டுவந்து வினியோகிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
சென்னை,
இதனால் வறட்சி நிலை ஏற்பட்டது. குடிநீருக்கு தட்டுப்பாடும் நிலவியது. அந்த சமயத்தில் மழையை எதிர்நோக்கி காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மாதம் மும்மாரி என்று பெருமை பேசிய தமிழகம் தற்போது ஆண்டுக்கு ஒரு முறையாவது பெய்யாதா? என்ற ஏக்கத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. இதனால் தற்போது குடிநீர் பிரச்சினையில் தமிழகம் கொஞ்சம் கொஞ்சமாக சிக்கியது.
பருவமழை பொய்த்ததால் தமிழகத்தில் சென்னையை தவிர மொத்த மழைப்பொழிவு 61 சதவீதம் பற்றாக்குறை ஆனது. சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் பூண்டியை தவிர்த்து மற்ற 3 ஏரிகளும் வறண்டுவிட்டன. ஏரிகளின் கடைசி சொட்டு நீரும் உறிஞ்சப்பட்ட செய்தி, பலரது கண்களையும் குளமாக்கியது.
இதையடுத்து மக்களின் குடிநீர் தேவையை சமாளிக்கும் பொருட்டு லாரிகள் மூலம் மாநகரில் ஆங்காங்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் பெருமளவு பிரச்சினைகள் நேர்ந்துவிடாமல் குடிநீர் வாரியம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தநிலையில் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் வரும் 2020-ம் ஆண்டில் ஸ்தம்பிக்கும் எனும் மத்திய அரசின் நிதி ஆயோக் அளித்த அறிக்கை சென்னை மாநகர மக்களின் தூக்கத்தை மேலும் கெடுத்துவிட்டது. அதை மெய்ப்பிக்கும் விதமாக நகரின் நிலத்தடி நீர்மட்ட அளவு கடுமையாக பாதித்து இருக்கிறது.
சென்னையின் வரப்பிரசாதமாக கருதப்படும் மெட்ரோ ரெயில் பயன்பாடு, சத்தமில்லாமல் குடிநீர் பிரச்சினையை உருவாக்கி இருக்கிறது. மெட்ரோ ரெயிலுக்காக ஏறக்குறைய 100 அடி ஆழம் வரை பூமி தோண்டப்பட்டு, கான்கிரீட் பூச்சு கொடுக்கப்பட்டதால் பூமிக்கடியில் 40 முதல் 100 அடி வரையிலான நீரோடைகளில் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் நீர் செல்லும் பாதை துண்டிக்கப்பட்டு உள்ளது என்று பொதுமக்கள் பரவலாக குற்றம் சாட்டுகின்றனர்.
இதில் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ள பகுதிகள் என்றால் அது சிந்தாதிரிப்பேட்டை, மண்ணடி, புதுப்பேட்டை, கொளத்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகள்தான். இந்த பகுதிகளில் தற்போது மக்களிடையே பரவலாக பேசப்படும் பிரச்சினை குடிநீர் பிரச்சினைதான். தற்போது இந்த பகுதிகளில் 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வருகிறது. அதுவும் பல நேரங்களில் சில நிமிடங்களில் முடிந்துவிடுகிறது. சில வீடுகளில் தண்ணீர் வரும் நேரங்களில் 4 குடங்கள் நிரம்பினாலே அரிது. சில பகுதிகளில் மாதக்கணக்கில் சொட்டு தண்ணீர் கூட வராத நிலையும் உள்ளது. விளைவு பொதுக்குழாய்களில் கூட்டம் முண்டியடிப்பதை பார்க்க முடிகிறது. இதனால் குடிப்பதற்கும், குளிப்பதற்கும் சரியான நீரின்றி மக்கள் திண்டாடி வருகிறார்கள்.
முக்கியமாக, தலையாரி வீட்டிலேயே பாதுகாப்பு இல்லையோ என்பதை போல, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் சிந்தாதிரிப்பேட்டையில் தான் அமைந்து உள்ளது. ஆனாலும் இந்த வட்டாரத்திலேயே குடிநீர் பிரச்சினை ஏற்பட்டு இருப்பது அதிகாரிகளிடையே சங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது. நிலத்தடி நீர் கேள்விக்குறியாகும் பட்சத்தில் குடிநீர் பிரச்சினை வந்துவிட்டால் எப்படி சமாளிப்பது? என்று குடிநீர் வாரிய அதிகாரிகளும் கலக்கத்தில் உள்ளனர். குடிநீர் குறைவாக கிடைப்பதால் அடுக்குமாடி கட்டிடங்களில் வசிப்பவர்கள் அளவுக்கு அதிகமாக தண்ணீரை பூமியில் இருந்து எடுப்பதால், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருவது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிப்பதுடன், பீதியிலும் உள்ளனர்.
இதுகுறித்து சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த முருகேசன் என்பவர் கூறியதாவது:- குடிநீர் 2 நாட்களுக்கு ஒருமுறை தான் வீடுகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. அதுவும் குறிப்பிட்ட நேரம் மட்டுமே. 5 குடம் பிடிப்பதற்குள் தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் பொதுக்குழாயில் முன்கூட்டியே குடத்தை போட்டு காத்துக்கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. தற்போது குடிநீர் பிரச்சினை குறித்து தாறுமாறாக தகவல் வெளியாகிறது. எனவே இதனை போக்க உரிய நடவடிக்கைகளை கையாள வேண்டும். பிழைப்பு தேடி சென்னைக்கு வரும் மக்கள், குடிநீருக்காக பிற ஊர்களுக்கு செல்லும் கொடுமை நேராத வகையில் உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு தேவையான தண்ணீர் வீராணம் ஏரி, நெய்வேலி சுரங்கம், போரூர் அடுத்து உள்ள கல்குவாரி மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் இருந்து பெறப்படும் குடிநீர் மூலம் நிலைமை சமாளிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்களான மீஞ்சூர், நெம்மேலி ஆகிய இடங்களில் இருந்து தலா 180 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. தண்ணீர் வராத பகுதிகளுக்கு தினசரி சுமார் 8 ஆயிரம் நடைகள் மூலம் லாரிகளில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
நெம்மேலி அருகில் உள்ள பேரூரில் புதிதாக 400 மற்றும் 150 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் நிறைவடைந்தால் சென்னையின் குடிநீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
சென்னையின் குடிநீர் தேவை அதிகரித்து வருவதால் வீடுகளில் உள்ள ஆழ்குழாய் கிணறுகள் மூலம் அதிகளவு தண்ணீர் எடுக்கப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் சென்னையில் உள்ள திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய 15 இடங்களில் உள்ள 145 கிணறுகளில் உள்ள நீர்மட்டத்தை கொண்டு நிலத்தடி நீர் மட்டம் இருப்பு கணக்கிடப்படுகிறது. அந்தவகையில் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதத்தை ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிலத்தடி நீர் மட்டம் 0.55 மீட்டர் முதல் 2.88 மீட்டர் வரை உயர்ந்து காணப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு நவம்பரில் இருந்து தற்போது வரை போதுமான அளவு மழை பெய்யாததால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்தே காணப்படுகிறது.
தற்போது பூண்டி ஏரியில் இருக்கும் 104 மில்லியன் கன அடி தண்ணீர் மூலம் 10 நாட்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும். இதுதவிர திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் பம்பு செட்டுகளில் இருந்தும், போரூர் அருகில் உள்ள கல்குவாரி மற்றும் போரூர் ஏரிகளிலும் போதுமான தண்ணீர் உள்ளது. இதுதவிர சென்னை, கொளத்தூரில் 380 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட ரெட்டேரியில் 110 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. இதனை சென்னையின் மற்றொரு நீர் ஆதாரமாக மாற்றுவதற்கான ஆய்வுப்பணிகள் தற்போது நடந்து வருகிறது. இதில் நீர் இருப்பு, நீரின் தர பகுப்பாய்வு, மாசு அளவு, உரிய சுத்திகரிப்பு முறை குறித்து ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. இதில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கான பணிகள் ஓரிரு நாட்களில் தொடங்க இருக்கிறது. இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.
குடிநீர் தட்டுப்பாடு, தற்போது தமிழகத்தில் அதிகம் பேசப்படும் வார்த்தையாகி வருகிறது. தமிழகத்தின் நீர்வளத்தை இலக்கியங்கள் சிறப்புக்கூற கேட்டு வளர்ந்த நாம், இன்றைக்கு குடிநீர் பிரச்சினையை உற்றுநோக்கி வருவது கொடுமையிலும் கொடுமை. தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நாம் மிகவும் எதிர்பார்த்த வடகிழக்கு பருவமழை பொய்த்துப்போனது. தென்மேற்கு பருவமழையும் ஏமாற்றியது. தற்போது அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் காலத்தில் பெய்யும் கோடைமழையையும் காணவில்லை.
இதனால் வறட்சி நிலை ஏற்பட்டது. குடிநீருக்கு தட்டுப்பாடும் நிலவியது. அந்த சமயத்தில் மழையை எதிர்நோக்கி காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மாதம் மும்மாரி என்று பெருமை பேசிய தமிழகம் தற்போது ஆண்டுக்கு ஒரு முறையாவது பெய்யாதா? என்ற ஏக்கத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. இதனால் தற்போது குடிநீர் பிரச்சினையில் தமிழகம் கொஞ்சம் கொஞ்சமாக சிக்கியது.
பருவமழை பொய்த்ததால் தமிழகத்தில் சென்னையை தவிர மொத்த மழைப்பொழிவு 61 சதவீதம் பற்றாக்குறை ஆனது. சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் பூண்டியை தவிர்த்து மற்ற 3 ஏரிகளும் வறண்டுவிட்டன. ஏரிகளின் கடைசி சொட்டு நீரும் உறிஞ்சப்பட்ட செய்தி, பலரது கண்களையும் குளமாக்கியது.
இதையடுத்து மக்களின் குடிநீர் தேவையை சமாளிக்கும் பொருட்டு லாரிகள் மூலம் மாநகரில் ஆங்காங்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் பெருமளவு பிரச்சினைகள் நேர்ந்துவிடாமல் குடிநீர் வாரியம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தநிலையில் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் வரும் 2020-ம் ஆண்டில் ஸ்தம்பிக்கும் எனும் மத்திய அரசின் நிதி ஆயோக் அளித்த அறிக்கை சென்னை மாநகர மக்களின் தூக்கத்தை மேலும் கெடுத்துவிட்டது. அதை மெய்ப்பிக்கும் விதமாக நகரின் நிலத்தடி நீர்மட்ட அளவு கடுமையாக பாதித்து இருக்கிறது.
சென்னையின் வரப்பிரசாதமாக கருதப்படும் மெட்ரோ ரெயில் பயன்பாடு, சத்தமில்லாமல் குடிநீர் பிரச்சினையை உருவாக்கி இருக்கிறது. மெட்ரோ ரெயிலுக்காக ஏறக்குறைய 100 அடி ஆழம் வரை பூமி தோண்டப்பட்டு, கான்கிரீட் பூச்சு கொடுக்கப்பட்டதால் பூமிக்கடியில் 40 முதல் 100 அடி வரையிலான நீரோடைகளில் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் நீர் செல்லும் பாதை துண்டிக்கப்பட்டு உள்ளது என்று பொதுமக்கள் பரவலாக குற்றம் சாட்டுகின்றனர்.
இதில் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ள பகுதிகள் என்றால் அது சிந்தாதிரிப்பேட்டை, மண்ணடி, புதுப்பேட்டை, கொளத்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகள்தான். இந்த பகுதிகளில் தற்போது மக்களிடையே பரவலாக பேசப்படும் பிரச்சினை குடிநீர் பிரச்சினைதான். தற்போது இந்த பகுதிகளில் 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வருகிறது. அதுவும் பல நேரங்களில் சில நிமிடங்களில் முடிந்துவிடுகிறது. சில வீடுகளில் தண்ணீர் வரும் நேரங்களில் 4 குடங்கள் நிரம்பினாலே அரிது. சில பகுதிகளில் மாதக்கணக்கில் சொட்டு தண்ணீர் கூட வராத நிலையும் உள்ளது. விளைவு பொதுக்குழாய்களில் கூட்டம் முண்டியடிப்பதை பார்க்க முடிகிறது. இதனால் குடிப்பதற்கும், குளிப்பதற்கும் சரியான நீரின்றி மக்கள் திண்டாடி வருகிறார்கள்.
முக்கியமாக, தலையாரி வீட்டிலேயே பாதுகாப்பு இல்லையோ என்பதை போல, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் சிந்தாதிரிப்பேட்டையில் தான் அமைந்து உள்ளது. ஆனாலும் இந்த வட்டாரத்திலேயே குடிநீர் பிரச்சினை ஏற்பட்டு இருப்பது அதிகாரிகளிடையே சங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது. நிலத்தடி நீர் கேள்விக்குறியாகும் பட்சத்தில் குடிநீர் பிரச்சினை வந்துவிட்டால் எப்படி சமாளிப்பது? என்று குடிநீர் வாரிய அதிகாரிகளும் கலக்கத்தில் உள்ளனர். குடிநீர் குறைவாக கிடைப்பதால் அடுக்குமாடி கட்டிடங்களில் வசிப்பவர்கள் அளவுக்கு அதிகமாக தண்ணீரை பூமியில் இருந்து எடுப்பதால், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருவது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிப்பதுடன், பீதியிலும் உள்ளனர்.
இதுகுறித்து சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த முருகேசன் என்பவர் கூறியதாவது:- குடிநீர் 2 நாட்களுக்கு ஒருமுறை தான் வீடுகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. அதுவும் குறிப்பிட்ட நேரம் மட்டுமே. 5 குடம் பிடிப்பதற்குள் தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் பொதுக்குழாயில் முன்கூட்டியே குடத்தை போட்டு காத்துக்கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. தற்போது குடிநீர் பிரச்சினை குறித்து தாறுமாறாக தகவல் வெளியாகிறது. எனவே இதனை போக்க உரிய நடவடிக்கைகளை கையாள வேண்டும். பிழைப்பு தேடி சென்னைக்கு வரும் மக்கள், குடிநீருக்காக பிற ஊர்களுக்கு செல்லும் கொடுமை நேராத வகையில் உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
550 மில்லியன் லிட்டர் தேவை இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:- சென்னை மாநகரில் உள்ள 6 லட்சத்து 73 ஆயிரத்து 339 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளன. இதுதவிர 24 ஆயிரத்து 712 தெருக்குழாய்கள் உள்ளன. இவற்றுக்கு தினசரி 830 மில்லியன் கன அடி தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் தற்போது ஏரிகளில் நீர் மட்டம் குறைவாக இருப்பதால் 550 மில்லியன் லிட்டர் வீதம் வினியோகம் செய்யப்படுகிறது.
நெம்மேலி அருகில் உள்ள பேரூரில் புதிதாக 400 மற்றும் 150 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் நிறைவடைந்தால் சென்னையின் குடிநீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
சென்னையின் குடிநீர் தேவை அதிகரித்து வருவதால் வீடுகளில் உள்ள ஆழ்குழாய் கிணறுகள் மூலம் அதிகளவு தண்ணீர் எடுக்கப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் சென்னையில் உள்ள திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய 15 இடங்களில் உள்ள 145 கிணறுகளில் உள்ள நீர்மட்டத்தை கொண்டு நிலத்தடி நீர் மட்டம் இருப்பு கணக்கிடப்படுகிறது. அந்தவகையில் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதத்தை ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிலத்தடி நீர் மட்டம் 0.55 மீட்டர் முதல் 2.88 மீட்டர் வரை உயர்ந்து காணப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு நவம்பரில் இருந்து தற்போது வரை போதுமான அளவு மழை பெய்யாததால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்தே காணப்படுகிறது.
தற்போது பூண்டி ஏரியில் இருக்கும் 104 மில்லியன் கன அடி தண்ணீர் மூலம் 10 நாட்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும். இதுதவிர திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் பம்பு செட்டுகளில் இருந்தும், போரூர் அருகில் உள்ள கல்குவாரி மற்றும் போரூர் ஏரிகளிலும் போதுமான தண்ணீர் உள்ளது. இதுதவிர சென்னை, கொளத்தூரில் 380 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட ரெட்டேரியில் 110 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. இதனை சென்னையின் மற்றொரு நீர் ஆதாரமாக மாற்றுவதற்கான ஆய்வுப்பணிகள் தற்போது நடந்து வருகிறது. இதில் நீர் இருப்பு, நீரின் தர பகுப்பாய்வு, மாசு அளவு, உரிய சுத்திகரிப்பு முறை குறித்து ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. இதில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கான பணிகள் ஓரிரு நாட்களில் தொடங்க இருக்கிறது. இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.
Related Tags :
Next Story