திருவள்ளூர் அருகே போலி டாக்டர் கைது
திருவள்ளூர் அருகே போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போலி டாக்டர்கள் கிளினிக் வைத்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் இளங்கோவன் தலைமையில் குழுவினர் பேரம்பாக்கம் மற்றும் இருளஞ்சேரி பகுதிகளில் உள்ள தனியார் கிளினிக்குகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்த மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து இணை இயக்குனர் இளங்கோவன் மப்பேடு போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாரதியை கைது செய்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

இந்த குழுவினர் இருளஞ்சேரி பகுதியில் உள்ள ஒரு கிளினிக்கில் ஆய்வு மேற்கொண்டபோது அங்கு அரக்கோணம் அடுத்த ரத்னசாந்தி நகரை சேர்ந்த சாரதி (வயது 61) என்பவர் பி.யு.சி. படித்துவிட்டு பல் மருத்துவம் செய்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்த மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து இணை இயக்குனர் இளங்கோவன் மப்பேடு போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாரதியை கைது செய்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story