ஏ.பி.எஸ். வசதியுடன் ‘அவெஞ்சர் 160 ஸ்ட்ரீட்’


ஏ.பி.எஸ். வசதியுடன் ‘அவெஞ்சர் 160 ஸ்ட்ரீட்’
x

பஜாஜ் நிறுவனத்தின் குரூயிஸ் மாடல் மோட்டார் சைக்கிளான அவெஞ்சர் 160 ஸ்ட்ரீட் மாடல் இப்போது ஏ.பி.எஸ். வசதியுடன் வந்துள்ளது.

குரூயிஸ் ரக மாடல் மோட்டார் சைக்கிளில் ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைப்பதும் இதுவே. இதன் விற்பனையக விலை ரூ.83,250 ஆகும். ஏற்கனவே உள்ள அவெஞ்சர் 180 மாடலுக்கு மாற்றாக அதேசமயம் ஏ.பி.எஸ். வசதியுடன் வந்துள்ளது.

இதில் ஏ.பி.எஸ். எனப்படும் ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ஏ.பி.எஸ்.) கூடுதலாக சேர்க்கப்பட்ட போதிலும் இது 180 மாடலை விட (ரூ.88,100) விலை குறைவாகும். இந்த மாடலில் பாதுகாப்பு அம்சமாக ஏ.பி.எஸ். வசதி சேர்க்கப்பட்டுள்ளது. சிவப்பு மற்றும் கருப்பு நிறங்களில் இவை கிடைக்கும்.

என்ஜின் திறனை 180 சி.சி.யிலிருந்து 160 சி.சி.யாகக்குறைத்த நிலையில் தயாரிக்கப்பட்ட இந்த மோட்டார் சைக்கிள் 160.4 சி.சி. திறனுடன் ஒற்றை சிலிண்டர், ஏர் கூல்டு மோட்டாரை கொண்டதாக வந்துள்ளது.

பல்சர் என்.எஸ். 160 மாடலில் உள்ள என்ஜின் இதில் இருந்தாலும், இதன் செயல்திறன் வேறாகும். இது 15 ஹெச்.பி. திறனை 8,500 ஆர்.பி.எம். வேகத்திலும், 13.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 7 ஆயிரம் ஆர்.பி.எம். வேகத்திலும் வெளிப்படுத்தக் கூடியது. இப்போதைக்கு இப்பிரிவில் சுஸுகி இன்ட்ரூடர் (ஆரம்ப விலை ரூ.1.01 லட்சம்) மோட்டார் சைக்கிளுக்கு போட்டியாக இது இருக்கும் என்று தெரிகிறது.


Next Story