தர்மபுரி அருகே வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவியிடம் வாலிபர் சில்மி‌ஷம் போலீசார் விசாரணை


தர்மபுரி அருகே வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவியிடம் வாலிபர் சில்மி‌ஷம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 23 May 2019 4:45 AM IST (Updated: 23 May 2019 1:08 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி அருகே வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவியிடம் வாலிபர் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தர்மபுரி, 

தர்மபுரி மாவட்டம் பெரியாம்பட்டி பகுதியை சேர்ந்த ஒரு 14 வயது மாணவி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வந்தார். இவர் தினமும் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம். இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த ஒரு 20 வயது வாலிபர் மாணவியை பின்தொடர்ந்து சென்று கேலி–கிண்டல் செய்துள்ளார்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் அந்த மாணவியின் வீட்டு கதவை தட்டியுள்ளார். கதவை திறந்த மாணவியின் கைகளை பிடித்து இழுத்து வாலிபர் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதன்காரணமாக அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி கூச்சலிட்டார். மாணவியின் கூச்சலை கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். இதனால் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுதொடர்பாக மாணவியின் குடும்பத்தினர் தர்மபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தலைமறைவான வாலிபரை தேடி வருகிறார்கள்.


Next Story