கயத்தாறில் பரிதாபம்: பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ரெயில்வே ஊழியர் தற்கொலை - போலீசார் விசாரணை


கயத்தாறில் பரிதாபம்: பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ரெயில்வே ஊழியர் தற்கொலை - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 22 May 2019 10:30 PM GMT (Updated: 22 May 2019 7:44 PM GMT)

கயத்தாறில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ரெயில்வே ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கயத்தாறு,

மதுரை மாவட்டம் பறவையை சேர்ந்தவர் ஜெபஸ்டியான் (வயது 40) ரெயில்வே ஊழியர். இவருக்கும், தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு கோட்டை பிள்ளையார்குளம் தெருவை சேர்ந்த சர்மிளாவுக்கும் திருமணம் நடந்தது.

கணவன்-மனைவி இருவரும் மதுரையில் வசித்து வந்தனர். இந்த நிலையில் ஜெபஸ்டியான் திடீரென்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டு, சர்மிளா தனது தாய் வீட்டுக்கு வந்துவிட்டார்.

இந்த நிலையில் ஜெபஸ்டியான் நேற்று சர்மிளாவின் வீட்டுக்கு வந்து தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்ததாக தெரிகிறது. ஆனால் அவர் மறுத்துவிட்டார்.

இதில் மனமுடைந்த ஜெபஸ்டியான் கயத்தாறு வடக்கு தெருவில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கயத்தாறு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story