பராமரிப்பு பணி: மின்சார ரெயில் சேவையில் மாற்றம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு


பராமரிப்பு பணி: மின்சார ரெயில் சேவையில் மாற்றம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x
தினத்தந்தி 23 May 2019 4:00 AM IST (Updated: 23 May 2019 1:37 AM IST)
t-max-icont-min-icon

பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை, 

இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

மூர்மார்க்கெட்-அரக்கோணம் இரவு 9.15, 10.10 மணி, மூர்மார்க்கெட்-பட்டாபிராம் சைடிங் இரவு 9.40, 10.35 மணி, மூர்மார்க்கெட்-திருவள்ளூர் இரவு 9.40, 11.10, 11.45 மணி, மூர்மார்க்கெட்-ஆவடி இரவு 10, 11.25 மணி, சென்னை கடற்கரை-ஆவடி இரவு 10, 11.15 மணி, பட்டாபிராம் சைடிங்-ஆவடி இரவு 11.55 மணி, பட்டாபிராம் சைடிங்- மூர்மார்க்கெட் இரவு 10.45 மணி, திருவள்ளூர்-மூர்மார்க்கெட் 8.50, 9.55 மணி, அரக்கோணம்-மூர்மார்க்கெட் மாலை 6.55, 9.45 மணி, அரக்கோணம்-ஆவடி இரவு 9.45 மணி, திருவள்ளூர்-ஆவடி இரவு 10.10 மணி, திருத்தணி-மூர்மார்க்கெட் இரவு 9.45 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்கள் வருகிற 25-ந்தேதி(சனிக்கிழமை) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

மூர்மார்க்கெட்-திருப்பதி காலை 9.50 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் வருகிற 26-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) மூர்மார்க்கெட்-அரக்கோணம் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, அரக்கோணத்தில் இருந்து புறப்படும்.

இதேபோல் அரக்கோணம்-சென்னை கடற்கரை காலை 6.25 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் 26-ந்தேதி அரக்கோணம்-ஆவடி இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, ஆவடியில் இருந்து புறப்படும்.

மூர்மார்கெட், சென்னை கடற்கரையில் இருந்து ஆவடி, திருவள்ளூர், பட்டாபிராம் சைடிங், திருத்தணி, கடம்பத்தூர், அரக்கோணத்திற்கு இயக்கப்படும் 44 மின்சார ரெயில்கள் வருகிற 26-ந்தேதி அதிகாலை 1.20 மணி முதல் காலை 10.45 மணி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் மறுமார்க்கமாக ஆவடி, திருவள்ளூர், பட்டாபிராம் சைடிங், திருத்தணி, கடம்பத்தூர், பொன்னேரி, வேலூர், அரக்கோணத்தில் இருந்து மூர்மார்க்கெட், சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் 53 மின்சார ரெயில்கள் வருகிற 26-ந்தேதி அதிகாலை 3.20 மணி முதல் காலை 7.20 மணி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

மூர்மார்க்கெட்-ஆவடி இரவு 10.15, 11.55 மணி, மூர்மார்க்கெட்-அரக்கோணம் இரவு 11.45, 11.50 மணி, வேளச்சேரி-ஆவடி வருகிற 25-ந்தேதி இரவு 9.25 மணிக்கு பயணிகள் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. இதேபோல் அரக்கோணம்-மூர்மார்க்கெட் இரவு 9.55, 10 மணி, திருவள்ளூர்-ஆவடி இரவு 10.40 மணி, திருத்தணி-மூர்மார்க்கெட் இரவு 10 மணி, திருவள்ளூர்-மூர்மார்க்கெட் இரவு 10.55 மணிக்கு பயணிகள் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

மூர்மார்க்கெட்-அரக்கோணம் இரவு காலை 5.20, 6.15, 7.35, 8.05, 8.45 மணி, அரக்கோணம்-மூர்மார்க்கெட் அதிகாலை 4.40, 6, 6.40, 9.15 மணி, வேலூர்-சென்னை கடற்கரை காலை 6 மணிக்கு வருகிற 26-ந்தேதி பயணிகள் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த பயணிகள் சிறப்பு ரெயில்கள் அனைத்தும் அரக்கோணம்-திருவள்ளூர் இடையே எக்ஸ்பிரஸ் ரெயில் பாதையில் இயக்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story