மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை போக்குவரத்து விதிமீறல் குறித்து 67,225 வழக்குகள் பதிவு 1,500 பேரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து


மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை போக்குவரத்து விதிமீறல் குறித்து 67,225 வழக்குகள் பதிவு 1,500 பேரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து
x
தினத்தந்தி 22 May 2019 11:15 PM GMT (Updated: 22 May 2019 8:23 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை போக்குவரத்து விதிமீறல் குறித்து 67 ஆயிரத்து 225 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், 1,500 பேரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு இருப்பதாகவும் போலீஸ் சூப்பிரண்டு அருளரசு கூறினார்.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்டத்தில் சாலை விபத்துக்களை தடுக்கும் 

விதத்தில் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை 

மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தேசிய 

நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துக்களை தடுக்கும் 

விதத்திலும், வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் 

வகையிலும் பஸ்நிறுத்தம் உள்ள இடங்களில் ‘பேரிகார்டுகள்’ 

மற்றும் எச்சரிக்கை விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.

அதேபோல் நாள்தோறும் போக்குவரத்து விதிமீறல்கள் 

தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உரிய 

நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 

ஜனவரி 1-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை நாமக்கல் 

மாவட்டத்தில் போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து 67 

ஆயிரத்து 225 வழக்குகளை நாமக்கல் மாவட்ட போலீசார் 

பதிவு செய்து உள்ளனர்.

இது குறித்து நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப் பிரண்டு 

அருளரசு கூறியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை 

போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக 67 ஆயிரத்து 225 

வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அதில் 50 ஆயிரம் 

வழக்குகள் ‘ஹெல்மெட்’ அணியாமல் இருசக்கர 

வாகனங்களை ஓட்டியதற்காக பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

கடந்த 2018-ம் ஆண்டு இதே கால கட்டத்தில் போக்குவரத்து 

விதிமீறல் தொடர்பாக 46 ஆயிரம் வழக்குகள் மட்டுமே பதிவு 

செய்யப்பட்டு இருந்தன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 

21 ஆயிரத்து 225 வழக்குகள் அதிகமாக பதிவாகி உள்ளது. 

அதேபோல் 1,500 பேரின் ஓட்டுனர் உரிமங்கள் தற்காலிகமாக 

ரத்து செய்யப்பட்டு உள்ளது.


இதனால் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு 

விபத்து எண்ணிக்கை மற்றும் விபத்தில் காயம் 

அடைந்தவர்களின் எண்ணிக்கை குறைந்து உள்ளது. 

விபத்துக்களை தடுக்க தொடர்ந்து கடுமையான நடவடிக்கை 

எடுக்கப்படும்.

இவ்வாறு போலீஸ் சூப் பிரண்டு அருளரசு கூறினார்.

Next Story