ஓமலூர் அருகே பயங்கரம்: சடங்கில் ஏற்பட்ட தகராறில் கட்டிட தொழிலாளி கொலை தங்கை கணவர் உள்பட 2 பேருக்கு வலைவீச்சு


ஓமலூர் அருகே பயங்கரம்: சடங்கில் ஏற்பட்ட தகராறில் கட்டிட தொழிலாளி கொலை தங்கை கணவர் உள்பட 2 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 23 May 2019 3:30 AM IST (Updated: 23 May 2019 2:34 AM IST)
t-max-icont-min-icon

ஓமலூர் அருகே சடங்கு நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறில் கட்டிட தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய தங்கை கணவர் உள்பட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஓமலூர், 

இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் 

கூறப்பட்டதாவது:-

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த பாகல்பட்டி 

செங்கானூரை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 33). கட்டிட 

தொழிலாளி. கனகராஜின் தங்கை சத்யாவின் வீடு 

கஞ்சநாயக்கன்பட்டியில் உள்ளது. அங்கு சத்யாவின் 

மகளுக்கு சடங்கு நிகழ்ச்சி நடந்தது. அதில் கலந்து கொள்ள 

கனகராஜ் கடந்த 19-ந்தேதி கஞ்சநாயக்கன்பட்டிக்கு சென்றார். 

அன்று இரவு கனகராஜ் படுகாயம் அடைந்த நிலையில் 

ஓமலூர் அரசு மருத்துவமனையில் கொண்டு வந்து 

சேர்க்கப்பட்டார். வாகன விபத்தில் கனகராஜ் சிக்கி படுகாயம் 

அடைந்ததாக கூறி உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்து 

உள்ளனர். பின்னர் சேலம் அரசு மருத்துவமனையில் மேல் 

சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு நேற்று முன்தினம் 

இரவு கனகராஜ் இறந்தார்.


இதுபற்றி கனகராஜின் தாயார் பழனியம்மாள் தீவட்டிப்பட்டி 

போலீசில் புகார் அளித்தார். அதில் கனகராஜ் சாவில் 

சந்தேகம் இருப்பதாக கூறி இருந்தார். இதுபற்றி போலீஸ் 

இன்ஸ்பெக்டர் சம்பத் விசாரணை நடத்தினார்.

விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

கனகராஜின் தங்கை மகளுக்கு சடங்கு நிகழ்ச்சி நடத்துவது 

தொடர்பாக கனகராஜிக்கும், அவருடைய தங்கையின் 

கணவர் வேணுகோபால் (36), உறவினர் கார்த்திக் (28) 

ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது 

கனகராஜை கார்த்திக் தாக்கி உள்ளார். அதில் கனகராஜ் 

பலத்த காயம் அடைந்தார். பின்னர் அவரை தூக்கிச்சென்று 

அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அப்போது 

விபத்தில் அவர் படுகாயம் அடைந்து உள்ளதாக கூறி 

நாடகமாடி சேர்த்தனர். கனகராஜ் சிகிச்சை பலனின்றி 

இறந்துள்ளார்.போலீஸ் விசாரணையில் மேற்கண்ட 

தகவல்கள் தெரியவந்தது.


கனகராஜ் இறந்தது தொடர்பாக போலீசார் மர்மச்சாவு 

வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில் கொலை என 

தெரியவந்ததால் கொலை வழக்காக பதிவு செய்தனர். இந்த 

கொலை தொடர்பாக கார்த்திக் மற்றும் கொலையை 

மறைத்ததற்காக வேணுகோபால் ஆகியோரை போலீசார் 

வலைவீசி தேடி வருகிறார்கள்.

சடங்கு நிகழ்ச்சி நடத்துவதில் ஏற்பட்ட தகராறில் கட்டிட 

தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் 

பரபரப்பை ஏற்படுத்தியது

Next Story