வைகை ஆற்றில் மணல் அள்ளிய 6 பேர் கைது - மாட்டு வண்டிகள் பறிமுதல்


வைகை ஆற்றில் மணல் அள்ளிய 6 பேர் கைது - மாட்டு வண்டிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 23 May 2019 4:30 AM IST (Updated: 23 May 2019 3:09 AM IST)
t-max-icont-min-icon

வைகை ஆற்றில் மணல் அள்ளி வந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 6 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கொடைரோடு,

நிலக்கோட்டை அருகே வைகை ஆறு ஓடுகிறது. இங்கு இரவு, பகலாக லாரி, டிராக்டர், மாட்டு வண்டிகளில் மணல் அள்ளப்பட்டு வருகிறது. இதை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் மணல் அள்ளுவதை முழுமையாக தடுக்க முடியவில்லை.

இந்தநிலையில் அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் மாலையகவுண்டன்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி வந்த 6 பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள், அணைப்பட்டி அருகே உள்ள குண்டலபட்டியை சேர்ந்த வேல்முருகன் (வயது 45), கிருஷ்ணன் (50), குமாரசாமி (35), பாண்டி (56), மணிகண்டன் (35), சுரேந்திரன் (30) ஆகியோர் என்பதும், வைகை ஆற்றில் இருந்து மணல் அள்ளி வந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 6 பேரை கைது செய்தனர். மேலும் மாடுகளுடன் 6 வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு அம்மையநாயக்கனூர் போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Next Story